New - DetailPage - DMK
header_right
ஆசிய தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.10 இலட்சத்தை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பதிவு: 29 Apr 2019, 14:16:22 மணி

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (28.04.2019), காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், தமிழகத்திற்கும், நம் நாட்டிற்கும் பெருமை தேடித் தரும் வகையில் தோஹா ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கள் வென்று சாதனை படைத்த கோமதி மாரிமுத்து அவர்களுக்கு, விளையாட்டுத்துறையில் இவர் நிகழ்த்தியுள்ள சாதனைகளை ஊக்குவித்து, உற்சாகப்படுத்தும் வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பத்து லட்ச ரூபாய் நிதியுதவியினை வழங்கினார்.

அதுபோது, கழக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., தலைமைக் கழக சட்ட ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் உடனிருந்தனர்.