New - DetailPage - DMK
header_right
பத்மஸ்ரீ விருது பெற்ற இசைக்கலைஞர் திரு சிவமணி அவர்கள் கழகத் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்

பதிவு: 07 Feb 2019, 12:56:55 மணி

இன்று (06-02-2019) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில், டிரம்ஸ் இசைக்கலைஞர் திரு சிவமணி அவர்கள் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றதையொட்டி நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களின் மார்பளவு சிலையை வழங்கி, தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்வின் போது, முரசொலி நிர்வாக மேலாண்மை இயக்குநர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உடனிருந்தார்.