New - DetailPage - DMK
header_right
தமிழ்நாட்டில் தகுதியுடைய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க, வாரத்துக்கு 50 இலட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கக் கோரி மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.

பதிவு: 20 Sep 2021, 16:51:57 மணி

தமிழ்நாடு அரசு நடத்திய இரு தடுப்பூசி சிறப்பு முகாம்களும் பெரும் வெற்றியடைந்துள்ளன. இம்மாதத்தின் முதல் 19 நாட்களில் மட்டும் 1 கோடிப் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனினும், குறைந்த அளவிலான ஒதுக்கீட்டினால் தமிழ்நாடு தொடர்ந்து தேசிய சராசரிக்கும் கீழ் உள்ளது. இந்நிலையை மாற்ற, சீரான இடைவெளிகளில், தொடர்ந்து இத்தகைய சிறப்பு முகாம்களை நடத்தவேண்டியுள்ளது. அதன்பொருட்டு, தமிழ்நாட்டில் தகுதியுடைய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க, வாரத்துக்கு 50 இலட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கக் கோரி மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.