New - DetailPage - DMK
header_right
newimg
சிறுபான்மை சமுதாய மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளை வீழ்த்த இந்த கிருஸ்துமஸ் விழாவில் உறுதியெடுக்க வேண்டும்” - கழகத் தலைவர்

பதிவு: 21 Dec 2018, 17:35:44 மணி

இன்று (21-12-2018) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள திருவள்ளுவர் மண்டபத்தில் நடைபெற்ற கிருஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டு 11 பேராயர்களுக்கு சிறப்பு செய்து, கொளத்தூர் தொகுதியில் உள்ள போதகர்கள் 67 பேருக்கு பரிசுப் பொருட்களை வழங்கினார். மேலும், 625 கிருத்துவ பெருமக்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டு உரையாற்றினார்.

கிறிஸ்துவ சமுதாயத்துக்கு பாதுகாவல் அரணாக விளங்கியவர் சகோதரர் சகோதரர் டி.ஜி.எஸ். தினகரன் என்பது உங்களுக்குத் தெரியும். சகோதரர் டி.ஜி.எஸ். தினகரன் மறைவிற்கு சட்டசபையில் அஞ்சலி செலுத்தி, அவர் வாழ்ந்த பகுதியில் உள்ள டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் சாலை என்று பெயரிட்டவர் தமிழக முதல்வராக இருந்த கலைஞர். இப்படி சிறுபான்மை சமுதாய மக்களுக்கு தலைவர் கலைஞர் ஆட்சியில் இருந்தபோது ஆற்றியப் பணிகளை எல்லாம் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இப்போது கூட ஒரு ஆட்சி மாநிலத்தில் இருக்கிறது. அது என்ன நிலையில் இருக்கிறது என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதேபோல், மத்தியிலே இருக்கக்கூடிய ஆட்சி மோடி தலைமையிலான மதவாதம் பிடித்து இருக்கக்கூடிய ஆட்சி. சிறுபான்மை மக்களுக்கு விரோதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய ஆட்சி மோடி தலைமையிலான பாஜக ஆட்சி. இவற்றை அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.

இப்படிப்பட்ட மத்திய அரசுக்கு ஜால்ரா போடக்கூடிய அரசாக தமிழகத்தில் ஒரு ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது. இந்த இரண்டு ஆட்சிகளை அப்புறப்படுத்துவதற்கு இந்த கிருஸ்துமஸ் விழாவிலே நாம் உறுதியெடுக்க வேண்டும், சபதமெடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, இந்த இரண்டு ஆட்சிகளும் அடியோடு ஒழிந்தால் தான் நம் நாடு வளம் பெற முடியும், நாட்டு மக்கள் நலமோடு வாழ்ந்திட முடியும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும் என கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறினார்.