
கழகத் தலைவர் கஜா புயல் பாதித்த தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்
பதிவு: 23 Nov 2018, 00:40:12 மணி
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் கஜா புயல் பாதித்த தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள குக்கிராமங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
கழகத் தலைவர் அவர்கள் பார்வையிட்ட இடங்கள்:
செங்கிப்பட்டி, கந்தர்வக்கோட்டை, திருவோணம் நால்ரோடு, கறம்பகுடி, நெய்வேலி, இடையாத்தி பாலம், வாட்டாத்தி கொள்ளக்காடு, சீதாம்பாள் புரம், துறவிக்காடு, புனவாசல், ஒட்டங்காடு, கொன்னகாடு, செருவாவிடுதி, திருச்சிற்றம்பலம், அம்மையாண்டி, ஆவணம், கைகாட்டி, மாங்காடு, அணவயல், வடகாடு, கீழாத்தூர், ஆலங்குடி, திருவரங்குளம், புதுக்கோட்டை, திருவப்பூர், நார்த்தாமலை, கீரனூர் உள்ளிட்ட ஊர்களில் கஜா புயல் பாதித்த இடங்களை மற்றும் சேதங்களை நேரில் பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறினார்.