New - DetailPage - DMK
header_right
newimg
மிலாது நபி திருநாளில் கழகத் தலைவர் அவர்களின் வாழ்த்துச் செய்தி

பதிவு: 21 Nov 2018, 09:52:40 மணி

அண்ணல் நபிகளாரின் அரிய போதனைகளும் அறிவுரைகளும் மனிதன் தன் வாழ்நாளில் அன்றாடம் கடைப்பிடிக்கத்தக்கவை மட்டுமல்ல - பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. அவை அனைத்தும் இஸ்லாமியத் தத்துவத்தின் சிறப்பம்சங்களாக திகழுவது மட்டுமின்றி - அவர்கள் அனைவராலும் மதிக்கப்படுகின்றன.

நபிகளாரின் போதனைகளை கடைப்பிடித்து வாழும் இஸ்லாமிய சமுதாயத்தின்பால் எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கும் பாச உணர்வோடு, இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான மிலாது நபித் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.