திராவிட முன்னேற்றக் கழகம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு
தமிழக விடுதலை வீரர்களின் திருவுருவச் சிலைகள் உள்ள அலங்கார ஊர்திகளை, டெல்லி #RepublicDayParade2022-இல் இடம்பெறாமல் தடுக்கலாம்; ஆனால் அவை இன்று நம் வரலாற்றைச் சுமந்து தமிழ்நாடெங்கும் செல்கிறது!
3 months before
அண்ணா பல்கலை #MIT-உடன் இணைந்து தோற்றுவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஆளில்லா விமானக் கழகத்தையும்; #MKU-இல் தொடங்கப்பட்டுள்ள சூரிய சக்தி மையத்தையும் திறந்து வைத்தேன்.
4 months before
முத்தமிழறிஞர் கலைஞரின் பெயரால் அமைந்துள்ள செம்மொழித் தமிழ் விருதுகளைத் தகுதிசால் தமிழறிஞர்களுக்கு வழங்கினேன். #CICT வளாகம் அமைந்துள்ள சாலைக்குச் செம்மொழிச் சாலை எனப் பெயர் சூட்டப்படும்.
4 months before
#KolathurVisit-ல் கெளதமபுரம், அசோக் அவன்யூ, ஜி.கே.எம். காலனி, நேதாஜி நகர், அஞ்சுகம் நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தேன்.
4 months before
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மென்மேலும் செழித்து தன்னிறைவு பெற்று வளர்ச்சி காண வேண்டும் என்ற இலக்கை நோக்கிய திட்டங்களை அறிவித்தேன்; முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தேன்.
4 months before
தருமபுரி - சேலம் போக்குவரத்தை எளிதாக்கிட 250 கோடி ரூபாயில் மேம்பாலம், புதிய பால் பதனிடும் நிலையம், சிப்காட் என தருமபுரி மாவட்ட மக்களை மனமகிழச் செய்யும் அறிவிப்புகளை வெளியிட்டேன்.
4 months before
முத்தமிழறிஞர் கலைஞரின் பெருமுயற்சியால் உருவான #CICT-இன் புதிய வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு 8 புதிய நூல்களை வெளியிட்டேன்.
4 months before
மக்களோடு வாழ் என்ற பேரறிஞர் அண்ணா சொன்ன வழியில்; முத்தமிழறிஞர் கலைஞர் பழக்கியபடி உங்களுக்கு உழைக்கவே காத்திருக்கிறேன் என்று உறுதிகூறி இதுவரையிலான என்னுடைய செயல்பாடுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
4 months before
மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரி என்று தலைவர் கலைஞர் தொடங்கிய பணியின் ஒரு பகுதியாக 11 மருத்துவக் கல்லூரி கட்டடத்தையும் மாண்புமிகு PMO India அவர்கள் திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டேன்.
4 months before
அயலகத் தமிழர் நாளில் புலம்பெயர்ந்து உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுடன் கலந்துரையாடினேன்.