Announcement - DMK
header_right
தமிழ்நாட்டின் நிதி நிலை’ குறித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அவர்களின் அறிக்கை

பதிவு: 08 Feb 2019, 12:37:08 மணி

“சிக்கனம் வீட்டைக்காக்கும்; சேமிப்பு நாட்டைக் காக்கும்” என்பதற்கு ஏற்ப, தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையிலான 2006-11 ஆட்சிகாலத்தில் தமிழ்நாட்டின் நிதி நிலை சிறப்பான வளர்ச்சியை எட்டியிருந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 2011-16 ஆட்சிகாலத்தில் சீரழிவு ஏற்படத் தொடங்கியது. இந்தச் சீரழிவு, 2014ல் ஜெயலலிதா தண்டனை பெற்று, எந்த விவகாரங்களையும் கையாள முடியாத அளவுக்கு செயலற்றிருந்த காலகட்டத்தில் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நிர்வாகத் திறனற்ற எடப்பாடி பழனிசாமி அவர்களின் 2016-18 ஆட்சியில் நிதி மேலாண்மை முற்றிலுமாக மோசமடைந்து, தமிழ்நாடு பேரழிவை சந்தித்து வருவதை இந்த ஆய்வறிக்கை முழுமையாக ஆராய்ந்து, புள்ளி விவரங்களை ஒப்பிட்டு முழுமையாக வெளிப்படுத்துகிறது.

குறிப்பாக, 08-02-2019 அன்று தமிழ்நாடு அரசின் 2019-20 நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், ‘நிதி மேலாண்மை’ என்ற வார்த்தைக்கே அர்த்தம் புரியாமல், இயலாமையை மறைத்துப் பொய்யுரைகளை கட்டமைக்கும், கடந்த 7 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், மாநில வருவாய் பெருமளவில் குறைந்து, தமிழ்நாட்டு மக்களுடைய தலையில் பெரும் தொகை கடனாக திணிக்கப்பட்டு, வருவாயில் பெரும்பங்கு வட்டிக்கே செலுத்தப்படும் அளவுக்கு, தமிழ்நாடு நிதி நெருக்கடியில் சிக்கித் தள்ளாடுவதை இந்த ஆய்வறிக்கை ஆதாரங்களோடு முழுமையாக எடுத்துரைக்கிறது.

ஆய்வறிக்கை:

தமிழ்: goo.gl/dmBNS9

ஆங்கிலம்: goo.gl/viCsC3