Achievements - DMK
header_right
 • செம்மொழி தமிழ் வளர்ச்சி
 • சமூக வளர்ச்சி
 • உயர்கல்வி
 • விவசாயத் துறை
 • தொழில்துறை வளர்ச்சி
 • கலைஞர் ஆட்சியின் சாதனைகள் 1989-91
 • கலைஞர் ஆட்சியின் சாதனைகள் 1996-2001
 • கலைஞர் ஆட்சியின் சாதனைகள் 2006-2011
 • போக்குவரத்து துறை
 • தகவல் தொழில்நுட்ப துறை சாதனைகள்
 • கலைஞர் ஆட்சியின் சாதனைகள் 1969-76
செம்மொழி தமிழ் வளர்ச்சி

 

தி.மு.க தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள்

 

தமிழைச் சொல்லி ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள் தமிழ் வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை, தமிழை ஆங்கிலத்திடம் அடகு வைத்துவிட்டார்கள் என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். அவர்களுக்கு உண்மை என்னவென்று தெரியும், ஆனால் தெரியாததுபோல் நடிக்கின்றனர். 1965-ம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீக்குளித்து இன்னுயிர் ஈந்த தியாகிகளிலும், காவலர்களின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களிலும் பெரும்பாலானோர் தி.மு.க.வினரே, அல்லது தி.மு.க ஆதரவாளர்களே. அது மட்டுமல்ல, அன்றைக்கு அரசு கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறையால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களும் தி.மு.க.வினரே.

 

 

தமிழ் கட்டாயப் பாடம்

 

அண்ணா வழியில் கலைஞர் அவர்களும் தமிழ்ப் பயிற்றுமொழிக் கொள்கையில் உறுதியானவர். 1967-68-ம் ஆண்டில் இளங்கலை வகுப்பிலும், 1969-70-ம் ஆண்டில் இளம் அறிவியல் வகுப்பிலும் தமிழ் பயிற்றுமொழி ஆக்கப்பட்டது. தமிழில் பயிலும் மாணவர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கவும் கலைஞர் ஆணை பிறப்பித்தார். 1996-ம் ஆண்டுக் கலைஞர் மீண்டும் முதலமைச்சரானபோது, மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும் தமிழைப் பாடமொழியாக்குவதற்கான ஆணை 1996, நவம்பர் 19-ம் நாள் பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது.

 

தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காமலேயே ஒருவன் பட்டம் பெற்றுச் செல்லக்கூடிய அவலநிலை நீடிப்பதாகக் கூறப்பட்டு வந்த குற்றச்சாட்டு, தி.மு.க ஆட்சிக் காலத்தில் நீக்கப்பட்டது. கலைஞர் ஐந்தாம் முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் நடைபெற்ற முதலாவது சட்டப் பேரவை கூட்டத்திலேயே இதற்கான சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தார். 2006-ம் ஆண்டு மே மாதம் 31-ம் நாள் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், அனைத்துப் பள்ளிகளிலும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை தமிழை ஒரு பாடமாகக் கட்டாயமாகக் கற்பிக்க வேண்டும் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து சிறுபான்மையினர் பள்ளிகள் தொடுத்த வழக்கை, உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. எனினும், கன்னியாகுமரி மாவட்ட மலையாளிகள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், 2008-ம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் 18-ம் நாள் உச்சநீதிமன்றமும் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

 

2010-2011-ம் ஆண்டு அண்ணா தொழிற்நுட்ப பல்கலைக் கழகங்களில் கட்டுமானவியல், இயந்திரவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் தமிழ்மொழி வழியாகக் கல்வி கற்க வகைச் செய்து, இந்தியாவிலேயே முதன்முறையாகத் தாய்மொழியில் கற்க ஆணையிடப்பட்டது. ஆக, இன்றைக்குத் தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் கற்பிக்கப்படுவதற்குக் கலைஞர் அவர்களே காரணம்.

 

அனைத்துக் கல்லூரிகளும் விருப்பம் சார்ந்த தகுதிப் புள்ளி முறையும் (choice based credit system) 2009-ம் ஆண்டுத் தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, பட்டப்படிப்பில் தமிழை முதல் பிரிவில் எடுத்துப் படிக்காத மாணவர்கள் நான்காம் பிரிவில் தமிழ் மொழியை ஒரு பாடமாகக் கட்டாயம் படிக்க வேண்டும். கலைஞர் அவர்களின் இந்த முயற்சியால், இன்று தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகள் அனைத்திலும் பிற மாநில மாணவர்களும், வெளிநாட்டு மாணவர்களும் தமிழை ஒரு பாடமாகப் படித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இனி, தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காமல் பட்டம் பெறும் பேச்சுக்கே இடமில்லை.

 

 

தமிழ் உரைநடை வளர்ச்சி

 

தமிழ் உரைநடை வளர்ச்சிக்கும் திராவிடர் இயக்கம் ஆற்றியுள்ள பணி குறிப்பிடத்தக்கதாகும். கடினமான நடையில் இருந்த தமிழ் உரைநடை, திராவிட இயக்க தலைவர்கள் எழுதத் தொடங்கிய பிறகே, எளிய நடையில் எல்லோருக்கும் புரியும் வகையில் வெளிவரத் தொடங்கியது. நாளிதழ்கள், வார இதழ்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட இதழ்கள் திராவிட இயக்கத் தலைவர்களால் வெளியிடப்பட்டன. அவற்றுள் விடுதலை, குடியரசு, திராவிட நாடு, நம் நாடு, முரசொலி, முத்தாரம், மன்றம், தென்றல் முதலிய இதழ்கள் முதன்மையானவை. அவ்விதழ்களில் திராவிட இயக்கத் தலைவர்கள் எழுதிய கட்டுரைகள், கதைகள் ஆகியன மக்களிடையே அரசியல் மற்றும் சமுதாய விழிப்பு உணர்வை ஏற்படுத்தின. அண்ணா எழுதிய ’ஆரிய மாயை, குமரிக் கோட்டம், பணத் தோட்டம்’ முதலிய நூல்களும், கலைஞர் எழுதிய ’ரோமாபுரிப் பாண்டியன், பொன்னர் சங்கர், குரளோவியம், தொல்காப்பியப் பூங்கா’ முதலிய நூல்களும், பேராசிரியர் அன்பழகன் எழுதிய ’தமிழர் திருமணமும் இனமானமும், தமிழ்க்கடல் அலைஓசை பரவும் தமிழ்மாட்சி’ ஆகிய நூல்களும் குறிப்பிடத்தகுந்தவை.

 

எல்லாவற்றுக்கும் மேலாக, பக்தி இலக்கியங்களை மட்டும் தூக்கிப் பிடித்து உலகப்பொதுமறையாம் திருக்குறளை பன்னெடுங்காலமாக மறைத்து வந்த பார்ப்பனச் சூழ்ச்சியில் இருந்து திருக்குறளை மீட்டு, திருமண அழைப்பிதழ் முதல் அரசுப் பேருந்துகள், அலுவலங்கள் என அனைத்து இடங்களிலும், ஒவ்வொரு தமிழரின் உள்ளங்களிலும் கொண்டு சேர்த்தது திராவிட இயக்கங்களே ஆகும்.

 

 

தமிழ்க் கவிதை வளர்ச்சி

 

தமிழ்க் கவிதை வளர்ச்சியிலும் திராவிடர் இயக்கம் புரட்சியை ஏற்படுத்தியது. “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்று ஒலித்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசனை, திராவிட இயக்கத்தின் தலைமைக் கவிஞர் எனலாம். அவர் பின்னால் கவிஞர் கண்ணதாசன், சுரதா, மீரா, முடியரசன், புலவர் பொன்னி வளவன், கவிஞர் கருணானந்தம் என்று பெரியதொரு கவிஞர் பட்டாளமே அணிவகுத்துக் கிளம்பியது. அவர்கள் தமிழுணர்வு, இசையுணர்வு ஆகியன பொங்கி எழும் கவிதைகளைப் படைத்தனர். அவர்களுடைய கவிதைகள் புலவர்களை மட்டுமல்லாமல் பொதுமக்களையும் சென்றடைந்தன. தமிழில் கவியரங்கம் நடத்தும் வழக்கத்தினை ஏற்படுத்தியதும் திராவிடர் இயக்கம்தான்.

 

கலைஞர் அவர்கள் கவிதைகள் இயற்றியதுடன், கவியரங்கங்களுக்கும் தலைமை தாங்கி நடத்தியுள்ளார். அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தபோது, “பூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம்” எனத் தொடங்கும் கலைஞர் பாடிய இரங்கற்பா, தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறப்பான ஓர் இடத்தைப் பெற்றுள்ளது.

 

 

திரைப்படங்கள் வழியே தமிழ் வளர்த்த தி.மு.க

 

திரைப்படங்கள் வழியாகவும் தமிழை வளர்க்க திராவிடர் இயக்கம் பாடுபட்டது. ஆரம்பகாலத் தமிழ் திரைப்படங்களைப் பார்த்தால், “நாதா, சதியே, பதியே…” என்று புரியாத மொழியில் பேசிக்கொண்டிருப்பர்கள். இந்த வழக்கத்தை மாற்றி, மக்கள் பேசும் மொழியில் நல்ல தமிழைப் பரப்பியவர்கள் அண்ணா, கலைஞர், கவிஞர் கண்ணதாசன், முரசொலி மாறன் போன்றவர்கள். அண்ணாவின் ‘வேலைக்காரி’, ‘சொர்க்கவாசல்’, கலைஞரின் ‘பராசக்தி’, ‘மனோகரா’ ஆகிய திரைப்படங்கள் நல்ல தமிழைப் பரப்பியவற்றில் முதன்மையானவைகளாகும். திரைப்படங்களில் கதை, வசனம், பாடல் ஆகியவற்றின் மூலம் தமிழ் வளர்த்த கலைஞர், ஐந்தாம் முறையாகத் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டபோது, தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளித்து ஆணை பிறப்பித்தார். இதனால், சம்திங் சம்திங், மும்பை எக்ஸ்பிரஸ், லவ் டுடே என்றெல்லாம் பெயர் வைத்த திரைத் துறையினர் தமிழில் பெயர் வைக்கத் தொடங்கினர்.

 

 

வழக்குமன்ற மொழியாகத் தமிழ்

 

வழக்குமன்ற மொழியாகத் தமிழ்மொழியே இருக்கவேண்டும் என்பதுதான் அண்ணாவின் கொள்கை. அதற்குரிய தகுதியை தமிழ் பெற்றிருக்கிறதா என்று கேட்டவர்களுக்கு, “தமிழில்தானே வாதாடினால் கண்ணகி? அவள் கூறிய வாதங்களை ஆங்கில மொழியால் அல்ல, வேறு எந்த மொழியாலும் அளிக்க முடியாது” என்று பதிலளித்தார் அண்ணா. 1967-ம் ஆண்டு அண்ணா முதலமைச்சரானதும், நீதியரசர் அனந்தநாராயணன் தலைமையில், சட்டத் தொகுப்புகளைத் தமிழில் மொழி பெயர்ப்பதற்காகக் குழு ஒன்றை நியமித்தார். இதன் பிறகு, 1968-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் நாள் முதலாவது சட்ட அகராதி, அண்ணா அவர்களால் வெளியிடப்பட்டது. நீதியரசர் அனந்தநாராயணன் தலைமையிலான குழு, சட்டத் தொகுப்புகள் பலவற்றையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டது.

 

1968 டிசம்பர் 12-ம் நாள் முதல், மாநில போக்குவரத்து மேல்முறையீட்டுத் தீர்ப்பாய அலுவலகம் தமிழில் செயல்படத் தொடங்கியது. 1970 ஜனவரி 14-ம் நாள் முதல், உயர்நீதிமன்றத்துக்குச் சார்நிலையில் இயங்கிவரும் உரிமையியல் நீதிமன்றங்கள், குற்றவியல் நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் ஆகியன சாட்சியங்களைத் தமிழில் பதிவு செய்துகொள்ளத் தொடங்கின. பின்னர், மேற்கூறிய நீதிமன்றங்களில் ஏப்ரல் 13-ம் நாள் முதல், தமிழில் தீர்ப்புகள் வழங்குவதற்கும் வகைச் செய்யப்பட்டது. திமுக ஆட்சியில் இருந்தபோது உயர்நீதிமன்ற மொழியாகத் தமிழ் ஆக்கப்படவேண்டும் என்பதற்காகக் கலைஞர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். 2006-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் நாள், இந்தக் கோரிகையை வலியுறுத்தி தமிழகச் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தங்களது கோரிக்கையை நிறைவேற்றுமாறு முதலமைச்சர் கலைஞர், பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

 

 

அரசுப் பணியில் தமிழுக்கு ஒதுக்கீடு

 

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கை. அந்தக் கோரிக்கையை ஏற்று 2010-ம் ஆண்டுச் செப்டம்பர் 30-ம் நாள் முதலமைச்சர் கலைஞர் ஓர் ஆணை பிறப்பித்தார். அந்த ஆணைப்படி, ஒரு குறிப்பிட்ட பணிக்கு தேவையான அடிப்படைக் கல்வித் தகுதியில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதன்படியே இன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அரசுப் பணிக்குப் பணியாளர்களைத் தேர்வு செய்து வருகிறது.

 

 

நடுவண் அரசின் ஆட்சிமொழியாகத் தமிழ்?

 

இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட காலப் பகுதியிலேயே நடுவண் அரசின் ஆட்சி மொழியாகத் தமிழை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, 1948, ஆகஸ்ட் முதல் நாள் ’திராவிட நாடு’ இதழில் அறிஞர் அண்ணா எழுதினார். தமிழை, நடுவண் அரசின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பதையே திமுகவும் தன்னுடைய முதன்மைக் கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. 1965-ம் ஆண்டு மார்ச் மாதம் 4-ம் நாள் மாநிலங்களவையில் பேசிய அண்ணா, “என்னுடைய முன்னோர்கள் எந்த மொழியில் பேசினார்களோ, என்னுடைய கவிஞர்கள் எந்த மொழியில் காவியங்களையும், தத்துவங்களையும் வழங்கினார்களோ, வற்றாத அறிவுச் சுரங்கங்களாக விளங்கிய இலக்கண இலக்கியங்களை எந்த மொழியில் நாங்கள் பெற்றிருக்கிறோமோ, அந்தத் தமிழ்மொழி மைய அரசின் ஆட்சிமொழியாக ஆகும் நாள்வரையில் நான் ஓயமாட்டேன்” என்று உறுதியாகத் தெரிவித்தார்.

 

அண்ணா வழியில் அயராது உழைக்கும் தலைவர் கலைஞர் அவர்களும் தமிழை நடுவண் அரசின் ஆட்சி மொழியாக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தி.மு.க மாநாடுகளிலும், பொதுக்குழு கூட்டங்களிலும் அதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 1982-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் நாள் முரசொலி மாறனும், 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ம் நாள் திருச்சி சிவாவும், தமிழை நடுவண் அரசின் ஆட்சி மொழியாக்கக் கோரி தனிநபர் சட்ட முன்வரைவை மாநிலங்களவையில் கொண்டு வந்தனர்.

 

2004-ம் ஆண்டு டாக்டர் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, தமிழை நடுவண் அரசின் ஆட்சி மொழியாக்குவது குறித்துக் குறைந்தளவு செயல் திட்டம் வெளியிடப்பட்டது. அதில், கலைஞரின் வலியுறுத்தலுக்கு இணங்க அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகள் அனைத்தையும் நடுவண் அரசின் ஆட்சி மொழிகளாக்குவது குறித்து ஆராய்வதற்காகக் குழு ஒன்று அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, டாக்டர் சித்தகாந்த் மகாபத்ரா தலைமையில் ஒரு குழுவை நடுவண் அரசு நியமித்தது. அந்தக் குழுவும் தனது ஆய்வறிக்கையை அரசிடம் அளித்துவிட்டது. அந்த அறிக்கை வெளியானதும் தமிழை நடுவண் அரசின் ஆட்சி மொழியாக நடைமுறைபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.

 

 

செம்மொழி தமிழ்

 

தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒரு நூற்றாண்டு காலமாகத் தமிழ்நாட்டில் இருந்து வந்தது. 1918-ம் ஆண்டு மார்ச் மாதம் 18-ம் நாள், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற புலவர்கள் கூட்டத்தில், சென்னைப் பல்கலைக் கழகம் தமிழ்மொழியைச் செம்மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடு விடுதலை அடைந்த பிறகே, தமிழ்மொழியைச் செம்மொழியாக நடுவண் அரசு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மறைமலை அடிகள், க.அப்பாதுரையார், தேவநேயப் பாவாணர் முதலிய தமிழறிஞர்கள் இந்தக் கோரிக்கையை வலியுறுத்திக் கட்டுரைகள் எழுதினர். பல்வேறு தமிழ் அமைப்புகள் தீர்மானங்களை நிறைவேற்றி நடுவண் அரசுக்கு அனுப்பின. ஆனால், தலைவர் கலைஞர் வலியுறுத்த தொடங்கிய பிறகே இந்தக் கோரிக்கைக்கு வலு சேர்ந்தது.

 

தமிழைச் செம்மொழியாக அறிவிக்கக் கோரி, 1996-ம் ஆண்டு முதலமைச்சர் கருணாநிதி நடுவண் அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தை மைசூருவில் உள்ள இந்திய மொழிகள் மைய நிறுவனத்துக்கு அனுப்பி வைத்த நடுவண் அரசு, அது குறித்து ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தியது. மொழிகள் மைய நிறுவனம் அறிஞர்களுடன் கலந்தாய்வு செய்த பின்னர், தமிழுக்குச் செம்மொழி தகுதி வழங்கலாம் என்று நடுவண் அரசுக்கு பரிந்துரை செய்தது. 1999 ஜனவரி 16-ம் நாள், சென்னையில் நடைபெற்ற திருவள்ளுவர் நாள் விழாவில் பேசிய முதலமைச்சர் கலைஞர், “தமிழ் செம்மொழியா, இல்லையா? என்ற விவாதம் இனிமேலும் தேவை இல்லை. தமிழ் செம்மொழிதான். நடுவண் அரசு அதை உடனடியாக அறிவிக்கவேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

 

இதே கோரிக்கையை வலியுறுத்தி 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ம் நாள், பிரதமர் வாஜ்பாய்க்குக் கடிதம் எழுதினார் கலைஞர். பின்னர் 2004-ம் ஆண்டு மே மாதம் 27-ம் நாள், பிரதமர் மன்மோகன் சிங் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் குறைந்த அளவு பொதுச்செயல் திட்டத்தை வெளியிட்டார். கலைஞர் வலியுறுத்தலுக்கு இணங்க, தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படும் என்ற கோரிக்கை அத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. அதன்படி, 2004-ம் ஆண்டுச் செப்டம்பர் 17-ம் நாள் நடைபெற்ற நடுவண் அரசின் அமைச்சரவை கூட்டத்தில், தமிழைச் செம்மொழியாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஆணை, 2004 அக்டோபர் 12-ம் நாள் நடுவண் அரசால் வெளியிடப்பட்டது. 2007, ஆகத்து 18-ம் நாள் சென்னையில் முதலமைச்சர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற விழாவில், நடுவண் அமைச்சர் அர்ஜூன் சிங், செம்மொழி தமிழ் மைய நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார். அதற்கான அலுவலகக் கட்டடம், 2008 ஜூன் 30-ம் நாள் கலைஞர் அவர்களால் சென்னையில் திறந்து வைக்கப்பட்டது.

 

நான்காவது முறையாகத் தி.மு.க அமைச்சரவை பதவியேற்றபோது தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறைக்காக ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கி அந்தத் துறை 13-5-1996 முதல் செயல்பட்டு வருகின்றது.

 

 

அகரமுதலி

 

1974-ம் ஆண்டு அன்றைய கழக அரசில் “செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்” நிறுவப்பட்டு, மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்கள் அதன் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். 1974 முதல் 1980 வரை முழுமையாக உழைத்தும் பாவாணர் அவர்களால் “ஆசைமொழி” வரைதான் எழுத முடிந்தது. 1981-ம் ஆண்டுப் பாவாணர் மறைந்தார். அதன்பின் 1985 ஜனவரியில் அவர் உருவாக்கிய முதல் தொகுதி நூல் வெளியிடப்பட்டது. 1989-ம் ஆண்டுக் கழக அரசு அகரமுதலித் திட்டத்திற்கு அளித்த ஊக்கம் காரணமாக இரண்டாம் தொகுதி உருவாக்கப்பட்டது. 1991 ஜனவரியில் கழக அரசு கலைக்கப்பட்டதன் காரணமாக இப்பணியில் தொய்வு ஏற்பட்டு, இந்த இரண்டாம் தொகுதி நூல் 8.5.1992-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

 

13.5.1996-ல் கழக அரசு அமைந்த பிறகு அகரமுதலி உருவாக்கும் திட்டம் முடுக்கிவிடப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் மூன்றாம் பாகம் உருவாக்கப்பட்டு, 25.2.1997-ல் வெளியிடப்பட்டது. “அ” முதல் “ஒள” வரையிலான சொற்கள் தொகுக்கப்பட்டு நூல்களாகிவிட்டன.

 

 

அஞ்சல்வழிக் கல்வி – தமிழ்

 

சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக அஞ்சல் வழியில் தமிழ்க் கல்வியைப் பயிற்றுவிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, மொரீசியஸ், ரீயூனியன், டர்பன், மடகாஸ்கர் ஆகிய பகுதிகளில் அஞ்சல் வழித் தமிழ்க் கல்வியைத் தொடரவும், மொரீசியசில் உள்ள மகாத்மா காந்தி நிலையம் இதன் தொடர்பகமாக விளங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

 

 

அரசினர் கீழ்த்திசை ஓலைச் சுவடிகள் நூலகம்

 

1869-ம் ஆண்டுத் தொடங்கப்பட்ட பழமையான இந்த நூலகத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், வடமொழி, இசுலாமிய மொழிகளில் உள்ள 72,314 ஓலைச் சுவடிகளைப் பாதுகாப்பதற்கு 13.32 இலட்சம் ரூபாய் செலவில் 1996-ல் குளிர்ப்பதன வசதி செய்யப்பட்டது. அனைத்துச் சுவடிகளையும் நுண்படச் சுருளில் கொண்டுவர 25 லட்சம் ரூபாய் செலவில் நுண்படக் கருவி வாங்கப்பட்டது.

 

 

அரசு அருங்காட்சியகம்

 

13.5.1996-க்குப் பிறகு பழநி, திருவாரூர், சிவகங்கை, காஞ்சிபுரம், நாகை, இராமநாதபுரம், கரூர் ஆகிய 7 இடங்களில் புதிய அருங்காட்சியகங்கள் தோற்றுவிக்கப்பட்டன. கபிலர் எழுதிய குறிஞ்சிப்பாட்டு இலக்கியத்தில் கூறப்படும் 96 மலர்களைப் பற்றிய காட்சி ஒன்று அமைக்கப்பட வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டு, அதன்படி இம்மலர்கள் தொகுக்கப்பட்டுப் பார்வைக்கு வைக்கப்பட்டன. தமிழக வரலாற்றில் இது முதல் முயற்சியாகும்.

 

 

இசைப்பள்ளி

 

13.5.1996-க்கு முன் சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 மாவட்டங்களில் மட்டுமே இசைப்பள்ளிகள் இருந்தன. 13.5.1996-க்குப் பின் திருநெல்வேலி, தூத்துக்குடி, கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திருவாரூர், சேலம், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சீர்காழி, சிவகங்கை, இராமநாதபுரம், ஈரோடு ஆகிய 17 இடங்களில் இசைப் பள்ளிகள் தொடங்கப்பட்டன.

 

 

இணையம்

 

1999 பிப்ரவரியில் உலகத் தமிழ் இணைய மாநாடு தமிழக அரசினால் நடத்தப்பட்டு, கணினியின் விசைப்பலகை ஒரே சீராக்கப்பட்டதுடன், உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இணையத்தில் தலைவர் கலைஞர் அனுப்பிய தமிழ் வாழ்த்துச் செய்தியே முதல் வாழ்த்துச் செய்தியாகும். இந்தியாவிலேயே இணையத்தில் அதிகப் பக்கங்களைக் கொண்ட மொழி தமிழ்தான் என்று அப்போதைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

இந்திய ஆட்சிப்பணித் தேர்வு

இந்திய ஆட்சிப்பணித் தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதும் முறையில், பொது மொழியான ஆங்கிலம் தவிர்த்து இந்தி பேசாத மாநிலத்தினர் வேறு மொழியை தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்தி பேசும் மாநிலத்தவர் தங்களது தாய்மொழியான இந்தியிலேயே தேர்வு எழுதியதால் அவர்களுக்கான வாய்ப்பு எளிதானது. பன்முகத்தனமையும் பல்வேறு தேசிய மொழி இனங்களை கொண்ட இந்தியாவில், ஒரு மொழி பேசக்கூடியவர்களுக்கு வாய்ப்புகளை எளிதாக்குவது என்பது, பிற மொழி பேசுபவர்களுக்கு துரோகம் இழைக்கக்கூடியதாகும். எனவே, தமிழர்கள் இந்திய ஆட்சிப்பணித் தேர்வுகளைத் தமிழில் எழுதினால் அதிகம் பேர் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இதற்கு ஏற்ப முந்தைய ஆட்சியில் தமிழில் நூல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. தமிழ் மொழி, இலக்கிய வரலாறு, புவியியல், வரலாறு போன்ற பாடங்களைத் தமிழில் தனித் தனியே தொகுத்து வெளியிட முடிவு செய்யப்பட்டு, முதல் முயற்சியாகத் ‘தமிழ்மொழி வரலாறு’ நூல் வெளியிடப்பட்டது.

 

இலக்கணக் குழு

தொல்காப்பியம், நன்னூல் ஆகிய இலக்கண நூல்களின் அடிப்படையில் இக்காலத் தேவைக்கேற்பவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன் கொள்ளத்தக்க வகையிலும் ஒரு புதிய இலக்கண நூலை எழுதி வெளியிடுவதற்காக வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்பட்டுக் கட்டுரைகள் தயாரிக்கப்பட்டன.

 

உலகத் தமிழர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு

உலகில் 36 நாடுகளில் வாழும் ஏறத்தாழ 87 லட்சம் தமிழர்கள் இடையே பலவகைகளிலும் உறவுகளை வலுப்படுத்த மொரீசியஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குத் தமிழ்க்குழு நேரில் சென்று உரிய பணிகளைச் செய்துள்ளது. 22 நாடுகளுக்குச் சிறந்த நூல்களை அனுப்பும் திட்டத்தின்கீழ் யாழ்ப்பாணம், சிங்கப்பூர், மொரீசியஸ், ரீயூனியன் முதலிய நாடுகள் ஒவ்வொன்றிற்கும் 100-க்கும் மேற்பட்ட சிறந்த நூல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. சிங்கப்பூர், மலேசியா, துபாய், மொரீசியஸ், டர்பன்(தென் ஆஃப்ரிக்கா), ரீயூனியன் ஆகிய நாடுகளுக்கு அஞ்சல் வழிபட்ட வகுப்புப் பாடங்களும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

 

ஊர்திகளில் தமிழ்

 

ஊர்திகளில் காணப்படும் பதிவெண் பலகைகளில் ஆங்கில எழுத்துக்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது அவற்றைத் தமிழில் எழுதிக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டு ஆணையிடப்பட்டது.

 

 

கருவூலத்தில் தமிழ்

கருவூலங்கள் மற்றும் சம்பளக் கணக்கு அலுவலகங்களில் பட்டியையோ (Bill), கைச்சாத்தையோ (Voucher) தமிழில் தயாரிக்கலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டது.

 

கலைக்களஞ்சியம்

 

நாடகக் கலைக்களஞ்சியம் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் வாயிலாக ஒரு தொகுப்பும், தமிழிசைக் கலைக்களஞ்சியம் - பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் வாயிலாக மூன்று தொகுப்புகளும், மருத்துவக் கலைக் களஞ்சியம் - தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் 5 தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் குழந்தைகள் கலைக் களஞ்சியம் நூல் தயாரித்து வெளியிடப்பட்டது.

 

 

சென்னை பெயர் மாற்றம்

 

“மெட்ராஸ்” என்னும் பெயர் “சென்னை” என 30.9.1996 அன்று மாற்றப்பட்டு, இன்று ஆங்கிலத்திலும், பிற மொழிகளிலும் சென்னை என்றே உலகெங்கும் வழங்கப்படுகிறது.

 

 

தமிழில் மருத்துவம்

மருந்துச் சீட்டுகள் அனைத்தும் தமிழில் எழுதப்பட வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அரசு வெளியிடும் மாத்திரைகளுக்கான உறைகளில் தமிழ் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்வண்டிகளில் தமிழ்

தமிழக அரசு எடுத்த முயற்சியின் விளைவாக அனைத்து தொடர்வண்டிகளிலும் தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டன.‘கம்பன் விரைவு வண்டி’, ‘மலைக்கோட்டை விரைவு வண்டி’, வேகத் தொடர் வண்டி’ முதலிய சொற்றொடர்களைப் புகை வண்டிகளில் இப்போது காணலாம்.

 

தேர்வாணையம்

 

வினாத்தாள்கள் அனைத்தும் தமிழில் முதலிலும் ஆங்கிலத்தில் அடுத்தும் அமைய ஏற்பாடு செய்யப்பட்டது.

 

 

அரசுடைமையாக்கப்பட்ட தமிழ் மேதைகளின் நூல்கள்

 

1 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் 1996-ம் ஆண்டுக்குப் பிறகு தேவநேயப் பாவாணர் (ரூ.20 லட்சம்), மறைமலை அடிகளார் (ரூ.30 லட்சத்து 30 ஆயிரம்), தமிழ்த் தென்றல் திரு.வி.க. (ரூ.20 லட்சம்), பேராசிரியர் கல்கி (ரூ.20 லட்சம்), விடுதலைப் பொன்விழா நிறைவினையொட்டி விடுதலைக் கனலைப் பரப்பிய தமிழ்ச் சான்றோர்களாகிய கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, பா. ஜீவானந்தம், நாமக்கல் கவிஞர், வ.உ.சிதம்பரனார், சுத்தானந்த பாரதியார், ஏ.எஸ்.கே. அய்யங்கார், வ.ரா., கவி கா.மு.ஷெரீப், நாவலர் சோமசுந்தரப் பாரதியார், பரலி சு.நெல்லையப்பர், வ.வே.சு. அய்யர், காரைக்குடி சா. கணேசன், எஸ். டி.எஸ். யோகி ஆகிய 13 பேரின் நூல்களும் அரசுடைமையாக்கப் பட்டு அவர்களது குடும்பம் ஒவ்வொன்றுக்கும் 5 லட்ச ரூபாய், வெ.சாமிநாத சர்மா (ரூ.5 லட்சம்), சாமி சிதம்பரனார் (ரூ.10 லட்சம்), மயிலை சீனி வேங்கடசாமி (ரூ.10 லட்சம்), கவிஞர் முடியரசன் (ரூ.10 லட்சம்) ஆகியோருக்குப் பரிவுத் தொகையாக வழங்கப்பட்டது. பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் அவர்களின் நூல்கள் அரசுடைமையாக்கப்பட்டு அவரின் குடும்பத்தாருக்கு 10 லட்ச ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

 

 

அரசு அறிவிப்புப் பலகைகளில் திருக்குறள்

 

அரசின் தலைமைச் செயலகத் துறைகளிலும், துறைத் தலைமை அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள், இணையங்கள் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்களிலும் ஆட்சிச் சொல் அகராதியில் உள்ள சொற்களில் நாள்தோறும் ஓர் ஆங்கிலச் சொல்லையும், அதற்குரிய தமிழ்ச் சொல்லையும், ஒரு திருக்குறளைப் பொருளுடனும் கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டுமென ஆணையிடப்பட்டது. திருக்குறளுக்குப் பண் அமைத்து, சுரம் அமைத்து 1958-ம் ஆண்டிலேயே அறத்துப் பாலின் முதல் பகுதியை (கீர்த்தனையாக) வெளியிட்டுள்ள இசை வித்தகர் மயிலாடுதுறை விசுவநாத சாஸ்திரி அவர்களின் அரும் தொண்டினைப் போற்றி அவரது இசைக் குறிப்புகளுடன் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இப்போது அச்சிட்டு இசைக் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் பாடமாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

 

 

அய்யன் திருவள்ளுவருக்கு அழகிய சிலை

 

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் ஆற்றிய பணிகளில் தலையாயப் பணி, தலைமுறைகளுக்கும் தனித்தோங்கி நிற்கும் பணி, சூழும் தென்கடல் ஆடும் குமரியில் அய்யன் திருவள்ளுவருக்கு அகிலமே கண்டு வியக்கும் அளவுக்கு 133 அடி உயரத்தில் 7,000 டன் எடைகொண்ட மாபெரும் சிலை 9 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் அமைத்திட்ட பணியாகும். தலைவர் கலைஞர் அவர்கள், இருபத்தைந்து ஆண்டுக் காலமாக எண்ணி எண்ணி விடுத்த பெருமூச்சு வீண்போகாமல், விண் முட்டும் சிலை ஒன்றை விரிகடல் பரப்பின் எல்லையில் எழுப்பி இருக்கிறார்.

 

சமூக வளர்ச்சி

தமிழ்த்தாய் வாழ்த்து:

அண்ணா மறைவுக்குப் பிறகு தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட தலைவர் கலைஞர், 1970-ம் ஆண்டு தமிழுக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் புதிய ஆணை ஒன்றை பிறப்பித்தார். அதன்படி அரசு விழாக்கள், கல்வி நிலையங்களின் விழாக்கள் ஆகியவற்றின் தொடக்கத்தில் பாடப்படும் இறை வணக்கத்துக்குப் பதிலாக, மனோன்மணீயம் காப்பியத்தில் பெ.சுந்தரம்(பிள்ளை) எழுதிய “நீராருங் கடலுடுத்த” எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படவேண்டும் எனக் கூறப்பட்டது. அதன்படியே, இன்றுவரையிலும் ‘நீராருங் கடலுடுத்த’ பாடல் அரசு விழாக்களிலும், கல்வி நிலைய விழாக்களிலும் பாடப்பட்டு வருகின்றது.

தமிழ் மொழியை வாழ்த்தும் இப்பாடலில், ‘ஆரிய போல் உலக வழக்கழிந் தொழிந்து’ என்று வரும் வரியை, வாழ்த்துப் பாடலில் ஒப்புமையும் வேண்டாம் பிறிதொரு மொழி அழிந்ததை குறிக்கவும் வேண்டாம் என சில வரிகளை நீக்கி அந்தப் பாடலை ‘தமிழ்த்தாய் வாழ்த்தாக’ பாடச் செய்தார் செய்தார் முதலமைச்சர் கலைஞர்.

கை ரிக்ஷாக்கள் ஒழிப்பு:

அடுத்ததாக, ஆண்டைகளை அடிமைகள் பல்லக்கில் சுமந்து செல்வதற்கு ஒப்பாக விளங்கிய மனிதனை மனிதன் உட்கார வைத்து இழுத்துக்கொண்டு செல்லும் கை ரிக்ஷாக்கள் ஒழிக்கப்பட்டு, அதற்குப் பதிலாகச் சைக்கிள் ரிக்ஷாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

குடிசை மாற்று வாரியம்:

குடிசை வீடுகள் இல்லா தமிழகம் அமையவேண்டும் என்பதுதான் கலைஞரின் லட்சியம். இதற்காக, இந்திய வரலாற்றில் முதன் முறையாகக் கலைஞர் ஆட்சியின்போது ’குடிசை மாற்று வாரியம்’உருவாக்கப்பட்டது. இதன்மூலம், குடிசைகளில் வாழ்ந்த மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாக்கித் தரப்பட்டன.

நில உச்ச வரம்பு:

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நில உச்சவரம்பு ஒரு நபருக்கு 30 ஸ்டாண்டர்டு ஏக்கரா என்று இருந்ததை மாற்றி, அதை 15 ஸ்டாண்டர்டு ஏக்கரா என மாற்றியதும் கலைஞர் ஆட்சிதான்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகச் சட்டம்:

திராவிட இயக்கக் கொள்கைகளில் ஒன்றான சுயமரியாதை திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கியது அண்ணா என்றால், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் இயற்றியது தலைவர் கலைஞர் அவர்கள். இதற்காக, 1970-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் நாள் தமிழகச் சட்டப் பேரவையில் ‘அர்ச்சகர் சட்டம்’ கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், அர்ச்சகர் தேர்வில் வெற்றி பெறும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரும் கர்ப்பக் கிரகம் சென்று கடவுளுக்குப் பூசை செய்யும் வழங்கப்பட்டது. ஆலயங்களில் நியமிக்கப்படும் அறங்காவலர்களில், தாழ்த்தப்பட்டச் சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஒருவரையும் நியமிக்க வேண்டும் என்பதை மரபாக மட்டுமே கொண்டிருந்த நிலையை மாற்றி, எந்தவொரு ஆலயத்து அறங்காவலர் குழுவிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் நிச்சயம் இடம்பெற்றாக வேண்டும் எனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், தமிழக அரசின் அர்ச்சகர் சட்டத்தை விரும்பாத சனாதனிகள், இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இவ்வழக்கில், 1972-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், “கோயில்களில் அர்ச்சகர்களை நியமிப்பது வகுப்பு வேறுபாடற்ற நடவடிக்கை. அந்த நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிட உரிமை உண்டு என்பதால், தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தம் செல்லுபடியாகும் எனக் கூறியது. அதன் தொடர்ச்சியாக பிற சாதி மக்கள் அர்ச்சகராகி பணி செய்து வருகின்றனர். இது கலைஞரின் சமத்துவ போராட்டத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

தேசியக் கொடி ஏற்றும் உரிமை:

இரண்டாவது முறையாக முதலமைச்சர் பதவியேற்றுக்கொண்ட கலைஞர், 1972-ம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர நாள் வெள்ளி விழாவின்போது, மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் உரிமையை மத்திய அரசிடம் வலியுறுத்திப் பெற்றார். அதுநாள்வரை, சுதந்திர நாளன்று டெல்லியில் பிரதமரும், குடியரசு நாளன்று குடியரசுத் தலைவரும் கொடியேற்ற, மாநிலங்களில் ஆளுநர்கள் கொடியேற்றுவது மரபாக இருந்தது. இந்நிலையில், மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநரைவிட மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களே கொடி ஏற்றும் உரிமை பெற்றவர் எனக் கலைஞர் போராடிப் பெற்ற உரிமையால், இன்று அனைத்து மாநில முதலமைச்சர்களும் தேசிய கொடி ஏற்றும் உரிமையைப் பெற்றனர் என்பதுதான் வரலாறு.

பெண்களுக்குச் சொத்துரிமை - நலத்திட்டங்கள்:

1929-ம் ஆண்டுச் செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு பெற்றோர் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை வழங்கும் தனிச் சட்டத்தை, 1989-ம் ஆண்டு மே மாதம் 6-ம் நாள், நாட்டுக்கே முன்னோடி மாநிலமாகத் தமிழகச் சட்டமன்றத்தில் தி.மு.க அரசு நிறைவேற்றியது.

ஏழை, எளிய குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் பெண்களின் திருமணத்துக்காக, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம், அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணத் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவித் திட்டம், ஈ.வே.ரா - நாகம்மையார் நினைவு மகளிர் இலவசப் பட்டப்படிப்புத் திட்டம், ஈ.வே.ரா - மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள் திருமண உதவித் திட்டம், சத்தியவாணி முத்து அம்மையார் இலவசத் தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம், சத்தியா அம்மையார் குழந்தைகள் காப்பகங்கள் திட்டம், சிவகாமி அம்மையார் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், பங்காரு அம்மையார் மகளிர் குழுக்கள் திட்டம் ஆகியற்றின் மூலம், மகளிர் பயன்பெறுவதற்காகத் தி.மு.க அரசு பல கோடி ரூபாய்களை ஒதுக்கி அவர்களின் வாழ்க்கைத் திறனை மேம்படுத்தியது.

மாற்றுத் திறனாளிகளை மனந்துகொள்ளும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஊக்க நிதி, விதவைகளின் குழந்தைகளுக்கு இலவசப் பாடநூல்களும், குறிப்பேடுகளும் வழங்கும் திட்டத்தைத் திமு.க அரசு தொடங்கி வைத்தது. மகளிர் தொழில் முனைவோருக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது, தொழில் மனை ஒதுக்கீட்டில் மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்களுக்கு மோட்டார் பொருத்திய இலவச வாகனங்கள் வழங்கப்பட்டு, மீனவ மகளிர் மீன் விற்பனைக்கு உதவி செய்யப்பட்டது. இந்தியாவிலேயே முதலாவதாக உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு, தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் உள்ளாட்சி நிர்வாகங்களில் பதவி வகிக்க ஆவனச் செய்யப்பட்டதும் தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான்.

1998-ம் ஆண்டு மகளிர் நடத்தும் நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டன. 1999 ஜனவரி முதல் நாள் அன்று, மகளிர் சிறு வணிகக் கடன் திட்டம் தொடங்கப்பட்டது.

மின்சாரம்:

1966-ம் ஆண்டுக் குறைந்த அளவு மின்சாரமே உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. நகரங்களிலேயே பல வீடுகளுக்கு மின் இணைப்பு தரப்படவில்லை. இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு மின் திட்டங்களைச் செயல்படுத்தி மின் உற்பத்தியை பெருக்க நடவடிகை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக நகர்ப்புரங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டதுடன், கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கு மின் இணைப்பு கிடைக்கப்பெற வேண்டும் என்ற நோக்கத்துடனொரு குடிசைக்கு ஒரு விளக்கு என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. இவற்றோடு, மலைமேல் இருக்கும் குக்கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால், தமிழ்நாட்டில் மின் இணைப்புகள் இல்லாத வீடுகளே இல்லை எனும் சூழ்நிலை தி.மு.க ஆட்சியின்போது உருவானது.

1966-ம் ஆண்டு 7,128 மில்லியன் யூனிட்டாக இருந்த மின் உற்பத்தி 2010-ம் ஆண்டு 72,987 மில்லியன் யூனிட்டாக அதிகரித்ததால்தான், மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் அதிக அளவில் மின்சாரம் வழங்க முடிந்தது.

சுகாதாரத் துறை:

1966-ம் ஆண்டுத் தமிழகத்தில் இருந்த மருத்துவமனைகளின் மொத்த எண்ணிக்கை 515. இவற்றில், தனியார் மருத்துவமனைகளும் அடங்கும். ஆனல், 2010-ம் ஆண்டு அரசு மருத்துவமனைகளின் மொத்த எண்ணிக்கை 10,784 ஆக அதிகரித்தது. இவற்றுடன் 10 நடமாடும் மருத்துவமனைகளும் இருந்தன. இவையல்லாமல், ஆயிரக்கணக்கான தனியார் மருத்துவமனைகளும் செயல்பட்டு வந்தன. இதற்கெல்லாம் சிகரம் வைத்தார்போல், தளபதி ஸ்டாலின் அவர்கள் சென்னை மேயராகப் பதவி வகித்த காலக் கட்டத்தில் சென்னை மாநகரம் இந்தியவின் மருத்துவத் தலைநகரம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு உயர்ந்தது. மல்டி ஸ்பெஷாலிடி எனப்படும் சிறப்பு மருத்துவமனைகளும் உருவாயிற்று. இந்தியா மட்டுமல்லாமல், பல்வேறு வெளிநாடுகளில் இருந்து மக்கள் சென்னை வந்து மருத்துவம் செய்துகொண்டு நலமுடன் திரும்பிச் சென்றனர்.

தி.மு.க ஆட்சியின்போது, குழந்தைகள் நலம் காக்க போலியோ ஒழிப்புத் திட்டத்தை நிறைவேற்றியதில், தமிழகம் இந்தியாவில் முதல் இடம் வகித்தது. எய்ட்ஸ் என்னும் கொடிய நோயைக் கட்டுப்படுத்தியதிலும் தமிழகம் இந்தியாவில் முதல் இடம் பெற்றது. மேலும், பிறப்பு விகிதத்தைக் குறைத்து மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதிலும் இந்தியாவிலே தமிழகம்தான் முதல் இடம் வகித்தது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில், இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநிலமெனத் தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்குரிய ஜே.ஆர்.டி. சுழற்பரிசு கேடயம், நற்சான்றிதழ், பரிசுத் தொகை ரூ.10 லட்சம் ஆகியவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த திரு. சி.பி.தாகூர் அவர்களால், தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த ஆர்க்காடு திரு. நா. வீராசாமி அவர்களிடம் 2001 ஜனவரி 3-ம் நாள் வழங்கப்பட்டது. சுகாதாரத் திட்டத்தை இந்திய அளவில் சிறந்த முறையில் நிறைவேற்றியதற்காகச் சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட 2000- மாவது ஆண்டுக்கான ஜே.ஆர்.டி. டாட்டா விருது, மேயர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களிடம் 2001 ஜனவரி 31-ம் நாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.பி.தாகூர் அவர்களால் வழங்கப்பட்டது.

குழந்தைகள் மரண விகிதத்தைக் குறைத்துள்ளதிலும் தமிழகம் மகத்தான சாதனை புரிந்துள்ளது. 2000-மாவது ஆண்டுவாக்கில், 1000 குழந்தைகள் பிறந்தால், பிறந்த ஓராண்டுக்குள் இந்திய அளவில் 72 குழந்தைகள் இறந்தன. ஆனால் தமிழகத்தில் இந்த விகிதம் 53 குழந்தைகள் என்ற அளவில் மட்டுப்படுத்தப்பட்டது. கலைஞர் முதன் முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்றிருந்த காலக் கட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கண்ணொளி வழங்கும் திட்டத்திற்கு இடையில் தொய்வு ஏற்பட்டது. 1996-க்குப் பின் கழக அரசு இத்திட்டத்திற்கு மீண்டும் புத்துயிர் அளித்து அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் கண் சிகிச்சை பிரிவுகளை மேம்படுத்தியது. ‘கண் உள் ஆடி’ களுக்கு (Contact Lens) விற்பனை வரி அறவே நீக்கப்பட்டது.

வீட்டுவசதி:

1966-ம் ஆண்டு அமைந்தகரையைத் தாண்டி சென்னை இல்லை. ஆனால், இன்று அதையும் தாண்டி அண்ணா நகர் என்றும் அதற்கு மேலும் விரிவடைந்து திருப்பெரும்புதூர் வரையிலும் சென்னை விரிவடைந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு தி.மு.க அரசுதான் காரணம். 1970-களில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது இருந்தபோது சென்னை, மதுரை, திருச்சி போன்ற பெருநகரங்களில் அண்ணா நகர், கலைஞர் கருணாநிதி நகர் (கே.கே. நகர்) போன்ற விரிவாக்க நகரங்கள் உருவாக்கப்பட்டு, தமிழ்நாட்டு வீட்டுவசதி வாரியத்தால் வீடுகள் கட்டும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இன்று அவையெல்லாம் பிரம்மாண்ட வளர்ச்சியைப் பெற்றுள்ளன.

உயர்கல்வி

உயர் கல்வி:

1967-ம் ஆண்டுத் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகுதான் உயர்கல்வி வளர்ச்சியில், தமிழகத்தில் வரவேற்கத்தக்க ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டது.

 • 1966-ம் ஆண்டுத் தமிழகத்தில் இருந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மொத்த எண்ணிக்கை 109. அவற்றில் அரசு கல்லூரிகள் 2, தனியார் கல்லூரிகள் 87. அதில் படித்த மாண்வர்களின் எண்ணிக்கை 1,31,093

கலைஞர் முதலமைச்சரானதும் 1969 முதல் 1976-ம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில், 68 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டன. பின்னர், அடுத்தடுத்துக் கலைஞர் முதலமைச்சர் ஆன காலகட்டங்களில் புதிதாகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டு, 2010-ம் ஆண்டில் தமிழகக் கல்லூரிகளின் எண்ணிக்கை 587 ஆக உயர்ந்தது.

இவற்றில் அரசுக் கல்லூரிகள் 62, பல்கலைக் கழகக் கல்லூரிகள் 9, அரசு உதவி பெறும் கல்லூரிகள் 133, சுயநிதிக் கல்லூரிகள் 383. இந்தக் கல்லூரிகளில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை 7,09,162 ஆக அதிகரித்தது.

இலவச கல்வி:

 • திமுக ஆட்சிக்கு வந்த புதிதில், 1968-ம் ஆண்டிலேயே புதுமுக வகுப்பில் இலவசக் கல்வி கொண்டுவரப்பட்டது. அண்ணாவை அடுத்துக் கலைஞர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காலகட்டங்களில் பட்டப்படிப்பும் இலவசக் கல்வியாக்கப்பட்டது
 • போக்குவரத்துக்கு வசதி இல்லாமல் மாணவர்கள் இடைநிற்றல் கூடாது என்பதற்காக, அவர்களுக்கு இலவச பயணச் சலுகையும் வழங்கப்பட்டது
 • 2010-ம் ஆண்டு, அரசுக் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பும் இலவசமாக்கப்பட்டது.
 • 50 ஆண்டுகளுக்கு முன்பு நகரங்களில் மட்டுமே கல்லூரிகள் என்றிருந்த நிலை மாறி, இன்றைக்குக் கிராமங்களிலும் பல புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டு வருவதற்குத் திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளே காரணம்.

பொறியியல் கல்வி:

 • 1966-ம் ஆண்டு, தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 12 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. இவற்றில் 5, தனியார் கல்லூரிகள். பல்தொழில்நுட்ப பள்ளிகளின் எண்ணிக்கை 35. இவற்றில் 10 தனியாருக்குச் சொந்தமானவை.
 • திமுக அரசின் தொலைநோக்கு திட்டங்களாலும், கல்வி வளர்ச்சிக்கு அளித்த ஊக்கத்தின் காரணமாக மாவட்டங்கள் தோறும் அதிக எண்ணிக்கையில் பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

  2010-ம் ஆண்டுத் தமிழ்நாடு முழுவதும் 362 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வந்தன. இவற்றில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 1,18,565 ஆக உயர்ந்தது.

 • பல்தொழிற்நுட்ப பள்ளிகளின் எண்ணிக்கையும் 2010-ம் ஆண்டுவாக்கில் 324 ஆக அதிகரித்து, இவற்றில் 1,00,977 மாணவர்கள் படித்து வந்தனர்.
 • இன்றைக்குத் தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இடம் கிடைக்கும் என்ற நிலை உருவாகி இருக்கிறதென்றால், அது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனையாகும்.

மருத்துவ கல்வி:

 • 1966-ம் ஆண்டுத் தமிழ்நாட்டில் இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை மொத்தம் 9. இவற்றில் ஒன்று தனியார் கல்லூரி.
 • மாவட்டங்கள் தோறும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படவேண்டும் என்ற திமுகவின் குறிக்கோளின் பலனாக, 2010-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 17 ஆகவும், பி.டி.எஸ் மற்றும் செவிலியர் போன்ற இதர மருத்துவப் படிப்புக் கல்லூரிகளின் எண்ணிக்கை 33 ஆகவும் அதிகரித்தன.

சட்டக் கல்வி:

 • 1966-ம் ஆண்டு ஒரே ஒரு சட்டக் கல்லூரிதான் தமிழ்நாட்டில் செயல்பட்டது. இது, 2010-ம் ஆண்டு 8 சட்டக் கல்லூரிகளாக அதிகரித்தது. இவற்றில் ஒன்று தனியார் கல்லூரி.

ஆசிரியர் பயிற்சி:

 • 1966-ம் ஆண்டுத் தமிழகத்தில் இருந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் மொத்த எண்ணிக்கை 9 ஆகும். 2010-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 645 ஆக உயர்ந்தது. ஆசிரியர் பயிற்சி மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

பல்கலைக்கழகங்கள்:

 • 1966-ம் ஆண்டுத் தமிழ்நாட்டில் இருந்த பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை 3 மட்டுமே. இவற்றில் ஒன்று தனியார் பல்கலைக் கழகம்.
 • திமுக அரசின் சீரிய செயல்பட்டதால், 2010-ம் ஆண்டு 24 அரசு பல்கலைக் கழகங்களும், 25 தனியார் பல்கலைக்கழகங்களும் திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டன
 • கோவையில் வேளாண் பல்கலைக் கழகம்
 • சென்னையில் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகம்
 • நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம்
 • சேலத்தில் பெரியார் பல்கலைக் கழகம்
 • சென்னையில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம்
 • கோவை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை ஆகிய இடங்களில் தலா ஓர் அண்ணா தொழிற்நுட்ப பல்கலைக் கழகமும்
 • சென்னையில் மேலும் ஓர் அண்ணா தொழிற்நுட்ப பல்கலைக் கழகம்
 • சென்னையில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம்
 • மத்திய அரசின் சார்பில் சென்னையில் கடல்சார் பல்கலைக் கழகம்
 • திருவாரூரில் மத்திய பல்கலைக் கழகமும்
 • திருச்சியிலும் கோவையிலும் பல்கலைக் கழகங்களுக்கு நிகரான மத்திய கல்வி நிலையங்கள்.

1997-ம் ஆண்டு உயர்கல்விக்கெனத் தனியாக ஒரு துறையை ஆரம்பித்து, உயர்கல்வியின் உன்னத வளர்ச்சிக்குப் பாடுபட்டது தி.முக அரசுதான். அந்த வகையில், ஆரம்பக் கல்விக்குக் காமராசர், உயர்கல்விக்குக் கலைஞர் என்று எதிர்கால வரலாறு போற்றும் அளவுக்கு உயர்கல்வி வளர்ச்சியில் சாதனை படைத்தது தி.மு.க அரசு.

விவசாயத் துறை

வேளாண் வளர்ச்சியில் தமிழ்நாடு:

1966-ம் ஆண்டு வேளாண் விளைபொருள் உற்பத்தி மிக மிகக் குறைவாக இருந்தது. அதை அதிகரிக்கத் தி.மு.க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. வேளாண் ஆராய்ச்சி மூலம் புதிய விதைகள் அறிமுகம், மானிய விலையில் விதைகள், உரங்கள் ஆகியன வழங்கியதுடன் இந்தியாவிலேயே முதன் முறையாக விவசாயப் பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதும் தி.மு.க அரசுதான்.

இத்தகைய நடவடிக்கைகளால், 1966-ம் ஆண்டு 35,24,220 டன்னாக இருந்த நெல் உற்பத்தி, 2010-ம் ஆண்டு 56,65,200 டன்னாக அதிகரித்தது. 1966-ம்ஆண்டு 95,49,600 டன்னாக இருந்த கரும்பு உற்பத்தி, 2010-ம் ஆண்டு 2,97,45,641 டன்னாக உயர்ந்தது.

1966-ம் ஆண்டுக் கடுமையான உணவுப் பஞ்சம் நிலவியது. அதிக விலை கொடுத்தாலும் அரிசி கிடைக்கவில்லை என்ற நிலைமை. இந்நிலையை மாற்றுவதற்காக, 1967 மே மாதம் 15-ம் நாள் சென்னையிலும் கோயம்புத்தூரிலும் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி திட்டத்தை முதலமைச்சர் அண்ணா, நடைமுறைக்குக் கொண்டு வந்தார். பின்னர் அது கைவிடப்பட்டது. அதைக் கருத்தில் கொண்டு திமுக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் நெல் உற்பத்தியில் தமிழ்நாடு தன்னிறைவு கண்ட நிலையில், 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி என்ற திட்டத்தை 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் நாள் கலைஞர் அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்தது. பின்னர் அது 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசியாக மாற்றப்பட்டது.

கோதுமை உற்பத்தித் துறையில் பஞ்சாப் மாநிலம் தொடர்ந்து முன்னணியில் இருந்தாலும், அரிசி உற்பத்தித் திறனில் பஞ்சாப் மாநிலம் அதுநாள்வரை தக்க வைத்துக்கொண்டிருந்த தனிச் சிறப்பான நிலையை மாற்றித் தமிழ்நாடு முதலிடத்துக்கு வந்துவிட்டது. இதனை அசோசியேட் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் நடத்தியுள்ள ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

எண்ணெய் வித்துக்கள் உற்பத்தித் திறனில் அரியானா மாநிலம் இதுவரை முதலாவது இடத்தில் இருந்து வந்தது. ஆனால், அந்த முதல்நிலை அரியானாவிடமிருந்து நழுவியது. எண்ணெய் வித்துக்கள் உற்பத்தித் திறனில் அரியானா, ஒரிசா ஆகிய இரண்டு மாநிலங்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு தமிழ்நாடு முதலிடத்துக்கு வந்துவிட்டது.

இதேபோல்,மரவள்ளிக் கிழங்கு உற்பத்தித் திறனில் தமிழகம் உலகிலேயே முதலிடம் வகித்தது தி.மு.கஆட்சியில்தான்.

மேலும், இந்தியாவிலேயே முதன்முறையாக, 1990-ம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழக அரசு விவசாயிகளுக்கு வழங்கிய இலவச மின்சாரம், தொடர்ச்சியான எதிர்ப்புகள், சிரமங்களுக்கிடையிலும் நீடிக்கப்பட்டு லட்சக்கணக்கான விவசாயிகள் பயன் பெற்றனர்.

“இந்தியாவிலேயே தமிழ்நாடு அரசி உற்பத்தித் திறனில் முதலிடம், கரும்பு உற்பத்தித் திறனில் முதலிடம், எண்ணெய் வித்துக்கள் திறனில் முதலிடம்” என்று 15.05.2000 தேதியிட்ட பிசினஸ் லைன் ஆங்கில ஏடு பாராட்டுத் தெரிவித்தது.

உழவர் சந்தைகள்:

உழுவோரும் நுகர்வோரும் பயன்பெற வேண்டுமென்ற எண்ணத்துடன் திமுக அரசால் உருவாக்கப்பட்ட திட்டம்தான் உழவர் சந்தைத் திட்டம். 1999-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ம் நாள் மதுரையில், முதல் உழவர் சந்தை திறக்கப்பட்டது. இதன் மூலம், இடைத்தரகர்கள் இல்லாமல், தரமான காய்கறிகள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாகப் பொதுமக்களிடம் போய்ச் சேர்ந்தது, பொதுமக்களுக்கு விலையும் குறைவாக இருந்தது. 100-வது உழவர் சந்தை 14.11.2000 அன்று சென்னை பல்லாவரத்தில் திறந்து வைக்கப்பட்டது.

மீன்வளம்:

1966-ம் ஆண்டுத் தமிழ்நாட்டில் பிடிக்கப்பட்ட கடல் மீன்கள் 126286 டன்களாகும். இதன் பிறகு தி.மு.க அரசு மீனவர்களுக்கு அளித்த பல்வேறு உதவிகளால், 2010-ம் ஆண்டுப் பிடிக்கப்பட்ட கடல் மீன்களின் அளவு 3,96,827 டன்களாக அதிகரித்தது.

தொழில்துறை வளர்ச்சி

தொழில்துறை வளர்ச்சி

தமிழகத்தில் முதன்முறை கழக அரசு பொறுப்பேற்றவுடன், உலகத்தரம் வாய்ந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தயாரிக்கும் சேலம் உருக்காலை-யை 1970-ம் ஆண்டு தமிழகத்துக்கு கொண்டு வந்தார் தலைவர் கலைஞர். சிறு மற்றும் குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வித்திடும் விதமாக, 1970-ம் ஆண்டு சிட்கோ நிறுவனத்தையும், பெரும் தொழில்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக 1971-ம் ஆண்டு “சிப்காட்” எனப்படும் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனத்தையும் (State Industrial Promotion Corporation of Tamil Nadu) கழக அரசு உருவாக்கியது. இவற்றுடன், 1971-ம் ஆண்டு திமுக ஆட்சியில் திருத்தம் செய்யப்பட்ட நில உச்சவரம்பு சட்டமும் தொழில் வளர்ச்சிக்கு, பெரும் பங்காற்றியது.

1.முதற்கட்டமாக, சிப்காட் நிறுவனம் மூலம், 1973-ம் ஆண்டு ராணிப்பேட்டையில் 729.78 ஏக்கர் பரப்பில் தொழில் வளாகம் உருவாக்கப்பட்டு, 168 கோடி ரூபாய் முதலீட்டில் 107 புதிய தொழில்கள் தொடங்கப்பட்டன.

2. 1974-ம் ஆண்டு ஓசூரில் 1,236 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டாவது தொழில் வளாகம் அமைக்கப்பட்டு, 500 கோடி ரூபாய் முதலீட்டில் 186 தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. இந்த இரண்டு தொழில் வளாகங்கள் மூலம், ஏறத்தாழ 20 ஆயிரம் இளைஞர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றனர்.

3.இதன் பிறகு 1989-ம் ஆண்டு மீண்டும் ராணிப்பேட்டையில் 133 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டாம் பிரிவு தொழில் வளாகம் உருவாக்கப்பட்டு, 99 புதிய தொழில்கள் தொடங்கப்பட்டன. இதன் மூலம், 3,400 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. இதேபோல், ஓசூரிலும் 457 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டாம் பிரிவு தொழில் வளாகம் தொடங்கப்பட்டு, 64 புதிய தொழில்களுடன் ஏறத்தாழ 6 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.

4.1996-ம் ஆண்டு நான்காவது முறையாக கழக அரசு அமைந்த பிறகு, திருப்பெரும்புதூர், இருங்காட்டுக் கோட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் சிப்காட் நிறுவனத்தால் புதிய தொழில் வளாகங்கள் அமைக்கப்பட்டடன. செய்யாறு, நெமிலி ஆகிய இடங்களிலும் புதிய தொழில் வளாகங்கள் அமைக்கப்பட்டன.

5.1996-ம் ஆண்டு இருங்காட்டுக் கோட்டையில், 2,450 கோடி ரூபாய் முதலீட்டில் ஆண்டுக்கு 1 லட்சத்து 20,000 கார்களை உற்பத்தி செய்யும் திறனுடன் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் கழக ஆட்சியின்போது தொடங்கி வைக்கப்பட்டது. ஏறத்தாழ 2,500 தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பினையும், 25,000 தொழிலாளர்களுக்கு மறைமுக வேலை வாய்ப்பினையும் வழங்கிய ஹூண்டாய் தொழிற்சாலை, வெளிநாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் கணிசமான அளவில் அன்னியச் செலாவணியை ஈட்டித் தந்தது.

6.இதன் அடுத்த கட்டமாக, தமிழ்நாடு தொழிற்துறை முன்னேற்றத்துக்கென 1997-ம் ஆண்டு ‘நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தைக் கொண்டு வந்தது கழக அரசு. இந்தச் சட்டம் மூலம் தொழில் வளர்ச்சிக்கென நிலத்தை கையகப்படுத்துவது எளிதாகியது. தமிழகத்தில் தொழில் தொடங்குவோருக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதிகள் வழங்கவும் புதிய விண்ணப்ப படிவம் அறிமுகப்படுத்தப்பட்டது.

7.1998-ம் ஆண்டு, திருவள்ளூரில் மிட்சுபிசி லேன்சர் கார் தொழிற்சாலை ஆண்டுக்கு ஒரு லட்சம் கார் தயாரித்திடும் ஆற்றலுடன், ஏறத்தாழ 320 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. இங்கு, 800 பேருக்கு மேல் நேரடி வேலை வாய்ப்பும், 6,400 பேருக்கு மேல் மறைமுக வேலை வாய்ப்பும் பெற்றனர்.

8.1999-ம் ஆண்டு சென்னை அடுத்த மறைமலைநகரில் 1,700 கோடி ரூபாய் முதலீட்டில் ஃபோர்டு மோட்டார் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. ஆண்டுக்கு 1 லட்சம் கார்களைத் தயாரித்திடும் திறனுடன் தொடங்கி வைக்கப்பட்ட இத்தொழிற்சாலை, 2,000 பேருக்கு மேல் நேரடி வேலை வாய்ப்பையும், 10,000 பேருக்கு மேல் மறைமுக வேலை வாய்ப்பையும் வழங்கியது.

9.சேலம் அயர்ன் அண்டு ஸ்டீல் கம்பெனி லிமிடெட் தொழிற்சாலை 500 கோடி ரூபாய் முதலீட்டில் 31.3.99 அன்று தொடங்கப்பட்டது.

10. ஜி.எம்.ஆர்.வாசவி தனியார் மின் உற்பத்தித் திட்டம் 825 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை பேசின் பிரிட்ஜில் 1999 மார்ச்சில் உற்பத்தியைத் தொடங்கியது.

11. தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் சார்பில் துறைமுகத்தை ஆழப்படுத்தும் திட்டம் 202 கோடி ரூபாய் முதலீட்டில் 1999 நவம்பரில் தொடங்கி வைக்கப்பட்டது. தூத்துக்குடியில் உரம் தயாரிக்கும் ஸ்பிக் தொழிற்சாலை, ஆலங்குளத்தில் சிமெண்ட் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.

12. இருங்காட்டுக் கோட்டையில் ரெனால்ட்ஸ் பால் பென் காம்பொனன்ட்ஸ் தொழிற்சாலை 30 கோடி ரூபாய் முதலீட்டில் 2000 ஆண்டு மார்ச் மாதம் உற்பத்தியைத் தொடங்கியது.

13. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், 2,800 ஏக்கர் பரப்பளவில் 110 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட பெருந்துறை வளர்ச்சி மையம் 2000-மாவது ஆண்டு ஜூலை 1-ம் தேதி அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

14. ஆப்டிக் பைபர் கேபிள் தொழிற்சாலை தமிழ்நாடு அரசு நிறுவனமான டிட்கோ, மத்திய அரசு நிறுவனமான டி.சி.ஐ.எல். (Telecommunications Consultants India Limited) மற்றும் ஜப்பான் நாட்டின் ஃப்யூஜிகூரா நிறுவனம் ஆகியவை இணைந்து மிக நவீனமான ஆப்டிக் பைபர் டெலிகாம் கேபிள்ஸ் (Optic Fibre Telecom Cables) உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை 28.50 கோடி ரூபாய் செலவில் 26.5.2000 அன்று நிறுவியது கழக அரசு.

15. தொழிற்சாலைகளுக்கான வாயுக்களை தயாரிக்கும் ப்ராக்ஸ் ஏர் இந்தியா பிரைவேட் லிமிடெட் (PRAX AIR INDIA PRIVATE LIMITED) தொழிற்சாலை 60 கோடி ரூபாய் முதலீட்டில் 21.8.2000 அன்று திருப்பெரும்புதூர் தொழில் வளாகத்தில் தலைவர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிறுவனம் மொத்தம் 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு தொழில் பிரிவுகளை அமைத்துள்ளது.

16. இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் பிரெஞ்சு நாட்டுத் தொழில்நுட்பத்துடன் 525 கோடி ரூபாய் செலவில் செயின்ட் கோபைன் கண்ணாடித் தொழிற்சாலை 27.9.2000 அன்று தொடங்கப்பட்டது. இதன் மூலம், ஆண்டுக்கு நூறு கோடி ரூபாய் அளவுக்கு அன்னியச் செலாவணி கிடைக்கப் பெற்றது.

17. ஓசூரில், 24.85 கோடி ரூபாய் முதலீட்டில் மலர் பதப்படுத்தும் டான் ப்ளோரா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பார்க் - மலர்த் தொழில் பூங்கா 220 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. இதன் மூலம் 500 பேருக்கு நேரடியாகவும், 1,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கப் பெற்றது.

18. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள மெட்ராஸ் ரீபைனரீஸ் நிறுவனத்தின் மணலி தொழிற்சாலை பிரிவு 2,360 கோடி ரூபாய் செலவில் 30 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணையை சுத்திகரிப்பு செய்யும் திறனுடையதாக விரிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.

19. கடலூர் மாவட்டம் திருச்சோபுரம் கிராமத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பென்னார் ரிஃபைனரீஸ் லிமிடெட் கம்பெனியின் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை 3,480 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆண்டுக்கு 6.5 மில்லியன் கச்சா எண்ணெயைச் சுத்திகரிப்பு செய்யும் தொழிற்சாலை ஒன்றை நிறுவியது. இந்நிறுவனமும், ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை வழங்கியது.

சிறுதொழில் வளர்ச்சி

தமிழக தொழிற்துறை வரலாற்றில், ஒரே இடத்தில் பல தொழில்கள் உருவாவதற்கு வகை செய்யும் தொழில் வளாகங்களை(SIDCO) முதன்முதல் அமைத்த பெருமை கழக அரசுக்குத்தான் உண்டு. இதற்காக, 1970-களில் தொழிற்மயமாக்குவதற்கான நிறுவனங்களை தி.மு.க அரசு ஏற்படுத்தியது.

1966-ம் ஆண்டுத் தமிழ்நாட்டில் 6,993 தொழிற்சாலைகள் மட்டுமே இருந்தன. இவற்றில் 3 லட்சத்து 84 ஆயிரத்து 967 தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், 2010-ம் ஆண்டுத் தி.மு.க ஆட்சிக் காலத்தில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 515 ஆக உயர்ந்தது. அவற்றில் வேலை பார்த்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 45 ஆயிரத்து 928 ஆக அதிகரித்தது. தி.மு.க அரசு கடைபிடித்த தொழிலாளர் கொள்கையும், தொழில் முனைவோருக்கு அளித்த பல்வேறு ஊக்கமும் அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலைகள் பெருக காரணமாய் அமைந்தன.

தமிழகத்திலுள்ள தேயிலை, ஜவ்வரிசி, கயிறு, தீப்பெட்டி, கைவினைப் பொருட்கள் முதலியவை சார்ந்த 335 தொழிற் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 1996 – 2001 கழக ஆட்சியின்போது, முதல் நான்கரை ஆண்டுகளில் மட்டும் 1,630 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. இதே காலகட்டத்தில், 4,715 சிறு தொழில் நிறுவனங்களுக்கு 93.54 கோடி ரூபாய் முதலீட்டு மானியம் வழங்கப்பட்டது. 14,779 சிறுதொழில் நிறுவனங்களுக்கு 32 கோடி ரூபாய் குறைந்த அழுத்த மின்கட்டண மானியமாக வழங்கப்பட்டது.

மேலும், 1,43,562 சிறுதொழில் நிறுவனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டு, அவற்றின் மூலம் 2,813.38 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் செய்யப்பட்டன. 12 லட்சத்து 66 ஆயிரத்து 21 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்தன.

தொழிலாளர் நலன்

ஒரு நாட்டின் தொழில் வளம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் தொழில் அமைதி ஆகிய மூன்றும் ஒன்றையொன்று சார்ந்தவை. தொழில் முன்னேற்றத்தை ஊக்குவிக்கின்ற அதே நேரத்தில், தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பேணுவதும் அரசின் நோக்கமாகும். நாட்டில் தொழிற்சாலைகள் பெருகுவதற்கு அங்கு தொழில் அமைதி மிக அவசியமானது. தொழிலாளர் நலன் காக்கப்பட்டால்தான் தொழில் அமைதி நிலவும் என்பதை உணர்ந்து கழக அரசு சிறப்பாக செயல்பட்டது.

1996 – 2001 தி.மு.க ஆட்சியில் தொழில் அமைதியில் தமிழகத்திற்கு முதலிடம் கிடைத்தது. தொழிலாளர் தகராறு காரணமாக தமிழகத்திலே எந்தவொரு பெரிய தொழில் நிறுவனத்திலும் நீண்ட நாள் வேலை நிறுத்தம், கதவடைப்பு போன்ற நிகழ்வுகள் பெறவில்லை என்பதே, நமது தொழிலாளர் நலக் கொள்கைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது.

கழக ஆட்சியின்போது, அகில இந்திய அளவில் ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சியினை ஆராய்ந்து இந்திய தொழிற்குழுமம் (Confederation Of Indian Industry) ஒரு அறிக்கை தயார் செய்தது. அந்த அறிக்கையில், இந்தியாவிலேயே தொழில் அமைதி நிலவுவதிலும், தொழிலாளர் நலன்களை பாதுகாப்பதிலும் தமிழகம் முதல் இடம் வகிக்கின்றது என்றும் குஜராத் இரண்டாவது இடம் என்றும் ஆந்திரப் பிரதேசம் மூன்றாவது இடம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கிகளில் பத்தாண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்த சுமைதூக்கும் தொழிலாளர்கள் சுமார் 2,500 பேர் 1996 – 2001 கழக ஆட்சியின்போது பணி நிரந்தரம் செய்யப்பட்டார்கள்.

தமிழ்நாடு மின் வாரியத்திற்குச் சொந்தமான நான்கு அனல் மின் நிலையங்களிலும் இரண்டு எரிவாயு சுழல் மின் நிலையங்களிலும் பணியாற்றி வந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் 7,651 பேர் 1-1-1999 முதல் பணி நிரந்தரம் செய்யப்பட்டார்கள்.

1996-ம் ஆண்டின் தொடக்கத்தில் கழக ஆட்சியின்போது பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 23,053 என்றிருந்தது. அடுத்த 4 ஆண்டுகளில் மேலும் 4,938 தொழிற்சாலைகள் புதிதாக கொண்டு வரப்பட்டு 2000-மாவது ஆண்டின் தொடக்கத்தில் 27,991 தொழிற்சாலைகளாக பதிவு செய்யப்பட்டன. தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்குதல் சட்டம் 1981-ன்படி 1996 – 2001 தி.மு.க ஆட்சிக் காலத்தில் முதல் நான்காண்டுகளில் மட்டும் மொத்தம் 87,580 தொழிலாளர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.

மூடிக் கிடந்த நிறுவனங்களைத் திறந்து தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதிலும், பொருளாதாரத்தை முன்னேற்றுவதிலும் கழக அரசு முன்னிலை வகித்தது. டன்லப் இந்தியா தொழிற்சாலை, கொங்கரார் காட்டன் மில்ஸ், தஞ்சாவூர் டெக்ஸ்டைல்ஸ், குவாலிட்டி ஸ்பின்னர்ஸ், பழனியாண்டவர் காட்டன் மற்றும் சிந்தடிக் டெக்ஸ்டைல்ஸ், காகா ஷூஸ், அண்ணாமலையார் டெக்ஸ்டைல்ஸ் போன்ற மூடிக்கிடந்த நிறுவனங்கள் கழக அரசு பொறுப்பேற்றவுடன், படிப்படியாக செயல்படத் தொடங்கின. வரிகளில் சீர்திருத்தம் செய்வதிலும் தி.மு.க அரசு சிறப்பாக செயல்பட்டது.

பெரும்பான்மையான பொருள்கள் மீதிருந்த பலமுனை வரியை நீக்கி 1989 – 90-ம் ஆண்டில் கழக ஆட்சியின்போது ஒருமுனை வரி கொண்டுவரப்பட்டது. பின்னர் வந்த அ.தி.மு.க ஆட்சியில் பல பொருட்களுக்குப் பலமுனை வரி விதிக்கப்பட்டது. 1996-ல் மீண்டும் கழா அரசு பொறுப்பெற்றவுடன், எல்லாப் பொருட்களின் மீதும் பலமுனை வரியை அகற்றி ஒருமுனை வரியாக மாற்றம் செய்யப்பட்டது.

1975-ம் ஆண்டு இறுதியில் திராவிட முன்னேற்றக் கழக அரசால் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட “தமிழ்நாடு வணிகர் நல வாரியம்” 1976 ஜனவரியில் கழக அரசு கலைக்கப்பட்டமையால் தொடங்கப்படவில்லை. பின்னர், 1989-ம் ஆண்டு கழக அரசு மீண்டும் அமைந்தபோது, 25.9.1989 அன்று வெளியிடப்பட்ட ஆணையின்படி தமிழ்நாடு வணிகர் நல வாரியம் தொடங்கப்பட்டு, 28.9.2000 வரை 35,352 வணிகர்கள் ஆயுள் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டனர்.

தமிழக வரலாற்றில் முதன்முறையாக 1999-2000 நிதிநிலை அறிக்கை தயாரிக்கும்முன் மாநிலத்திலுள்ள அனைத்து வர்த்தகச் சங்கங்கள், வணிகர் சங்கங்கள் ஆகியோரை அழைத்து அவர்களுடைய கருத்துகளைக் கேட்டு வரிச்சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதுபோலவே, 2000 -2001 நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் முன்பும் 11.3.2000 அன்று கூட்டம் நடத்தப்பட்டு கருத்துகள் கேட்கப்பட்டன. தொழிற்சாலை பெருக்கம், வணிகம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் வேலை வாய்ப்புகளை விரைந்து பெறுவதற்கு போக்குவரத்து சிறப்பாக இருப்பது முக்கியம். இதை கருத்தில் கொண்டு, கிராமப்புறங்களை முக்கிய சாலைகளுடன் இணைக்கும் இணைப்புச் சாலை திட்டத்தை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி 1976-க்கு முன்பே தீட்டி அதில் வேகமான வளர்ச்சி கண்டது என்பதை அனைவரும் அறிவர்.

கலைஞர் ஆட்சியின் சாதனைகள் 1989-91

1989 - 1991 ஆட்சிக் காலம்

1. தமிழக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், பொங்கல் முன்பணம் உள்ளிட்ட சலுகளைகள்.

2. பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிடத் தனிச் சட்டம்.

3. ஏழைப் பெண்கள் பயன்பெறும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமண உதவித் திட்டம். 1989-ல் ரூ.5,000 நிதியுதவி, 1996-ல் ரூ.10,000 நிதியுதவி, 2006-ல் ரூ.15,000 நிதியுதவி, 2007-ல் ரூ.20,000 நிதியுதவி.

4. ஈ.வெ.ரா – நாகம்மையார் நினைவு மகளிர் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம்.

5. ஆதிதிராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், வருமான வரபுக்கு உட்பட்ட பிற்படுத்தப்பட்டோரில் பெண்களுக்குப் பட்டப் படிப்புவரை இலவசக் கல்வி, 2008-ல் முதுகலைப் பட்டப் படிப்புவரை இலவசக் கல்வி.

6. கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நிதியுதவி வழங்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம். 1989- 1990-ல் ரூ.200 நிதியுதவி, 1996- 2001-ல் ரூ.500 நிதியுதவி, 2006-ல் ரூ.6,000 நிதியுதவி.

7. மகளிர் திட்டத்தின் மூலம் மாநிலமெங்கும் மகளிர் சுய உதவிக் குழுக்கள்.

8. வன்னியர், சீர்மரபினர் உட்பட மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு தனி இட இதுக்கீடு.

9. ஆதிதிராவிடர்களுக்கு மட்டும் 18 விழுக்காடு இட ஒதுக்கீடு நிர்ணயித்து, பழங்குடி இனத்தவருக்கு 1 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு.

10. மகளிர்க்கு அரசு வேலை வாய்ப்பில் 30 விழுக்காடு இட ஒதுக்கீடு.

11. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்.

12. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பு.

கலைஞர் ஆட்சியின் சாதனைகள் 1996-2001

1996 – 2001 ஆட்சிக் காலம்

1. உயர்கல்வித் துறை உருவாக்கம்.

2. நெடுஞ்சாலைத் துறை உருவாக்கம்.

3. தகவல் தொழில்நுட்பத் துறை உருவாக்கம்.

4. சமூக சீர்திருத்தத் துறை உருவாக்கம்.

5. இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை உருவாக்கம்.

6. சென்னையில் டைடல் பூங்கா அமைக்கப்பட்டது.

7. உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர்க்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு.

8. பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம்.

9. உழவர் சந்தைத் திட்டம்.

10. வருமுன் காப்போம் திட்டம்.

11. கால்நடைப் பாதுகாப்புத் திட்டம்.

12. பள்ளிகளில் வாழ்வொளித் திட்டம்.

13. விவசாயத் தொழிலாளர் நல வாரியம், தொழிலாளர் நலனுக்கெனத் தனித்தனி நல வாரியங்கள்.

14. தாய்மொழி வளர்ச்சிக்குத் தனி அமைச்சகம்.

15. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்.

16. தென்குமரியில் 133 அடி உயர அய்யன் திருவள்ளுவர் சிலை.

17. ஆட்சிப் பொறுப்பேற்ற 6 மாதங்களுக்குள் தடைபட்டுக் கிடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேர்தல்.

18. கிராமங்கள்தோறும் சிமெண்ட் சாலைகள்.

19. வரலாறு காணாத வகையில் ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் திட்டம்.

20. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டம்.

21. கிராமப்புற பெண்களுக்குத் தொழிற்கல்லூரிகளில் 15 விழுக்காடு இட ஒதுக்கீடு.

22. கிராமப்புறங்களுக்கு மினிபஸ் திட்டம்.

23. சென்னை கோயம்பேட்டில் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம்.

24. சேமிப்புடன்கூடிய மகளிர் சிறுவணிகக் கடன் திட்டம்.

25. பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டம்.

26. மதுரை மாநகரில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமைக்கப்பட்டது.

27. மாணவர்களுக்கு இலவசப் பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டது.

28. அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்.

29. 10,000 சாலைப் பணியாளர்கள் நியமனம்.

30. 13,000 மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் நியமனம்.

கலைஞர் ஆட்சியின் சாதனைகள் 2006-2011

2006 – 2011 ஆட்சிக் காலம்

1. 22 லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி.

2. விவசாயிகளுக்கான பயிர்க்கடன் வட்டி 2005-2006-ல் 9 விழுக்காடு, 2006-2007 கழக அரசில் 7 விழுக்காடு, 2007-2008-ல் 5 விழுக்காடு, 2008-2009-ல் 4 விழுக்காடு, 2009-2010-ல் பயிர்க்கடன் வட்டி ரத்து, 2006-க்குப் பின் இதுவரை 36 லட்சத்து 71 ஆயிரத்து 372 விவசாயிகளுக்கு 8 ஆயிரத்து 838 கோடியே 6 லட்சம் ரூபாய் பயிர்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

3. 2005-2006-ல் நெல் கொள்முதல் குவிண் டாலுக்கு விலை ரூபாய் 600, 2010-2011-ல் சாதா ரக நெல் விலை 1050 ரூபாய், சன்ன ரக நெல் விலை 1100 ரூபாய்.

4. மீண்டும் புதுப்பொலிவுடன் 117 உழவர் சந்தைகள், மேலும் புதிதாக 45 உழவர் சந்தைகள் அமைப்பு.

5. பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 2006-ல் 50 சதவீத காப்பீட்டுத் தொகையை அரசே மானியமாக வழங்கி, ஊக்கப்படுத்தியதால் 2005-2006-ல் ஒரு லட்சம் விவசாயிகள் பயனடைந்த நிலையில், 2009-2010 ஆம் ஆண்டில் 9 லட்சத்து ஓராயிரத்து 643 விவசாயிகள் அரசின் மானிய உதவி பெற்றுப் பயிர்க் காப்பீடு செய்தனர். இதுவரை 9 லட்சத்து ஆயிரத்து 643 விவசாயிகளுக்கு 974 கோடி ரூபாய் இழப்பீடுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

6. கரும்பு விவசாயிகளுக்கு 2005-2006-ல் டன் ஒன்றுக்கு வழங்கப்பட்ட விலை ரூ.1014, தற்போது டன் ஒன்றுக்கு ரூ.2,000 வழங்கப்படுகிறது.

7. ஆதிதிராவிட விவசாயிகள் ‘தாட்கோ’ நிறுவனத்தின் மூலம் 31.3.2006 வரை பெற்ற கடன் தொகை வட்டியுட்பட 5 கோடியே 25 லட்சம் தள்ளுபடி.

8. நில அடமானத்தின்மீது தொழில்புரிய வழங்கப்பட்ட பண்ணைசாராக் கடன்களுக்கு வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்பட்டு, வாங்கிய கடன் அசல் தொகையைச் செலுத்தினால் கடன் ரத்து.

9. மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் புரட்சிகரமான திட்டத்தின்கீழ் 189 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம்.

10. 369 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம்.

11. கழக அரசு விவசாயிகளுக்கு வழங்கும் சலுகைகளால் உணவு தானிய உற்பத்தி 2005 - 2006-ல் 61.17 லட்சம் டன், 2008-2009-ல் 71.01 லட்சம் டன், 2009-2010-ல் 84.29 லட்சம் டன் என உயர்வு.

12. விவசாயிகளைச் சுயஉதவிக் குழுக்களாக ஒருங்கிணைத்து சுழல்நிதி வழங்கும் திட்டத்தின்கீழ் 27 ஆயிரத்து 294 குழுக்கள் அமைக்கப்பட்டு, 27 கோடியே 29 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சுழல்நிதியாக வழங்கப்பட்டு, 32 ஆயிரத்து 940 குழுக்களுக்கு 402 கோடியே 56 லட்சம் ரூபாய் பயிர்க் கடனாகவும் அளிக்கப்பட்டுள்ளது.

13. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில், மின்சாரம் விரயமாவதைத் தடுத்திட, சிறுகுறு விவசாயிகளுக்கு பழைய மின் மோட்டார்களுக்குப் பதிலாக இலவசமாக புதிய மின்மோட்டார்களும், பெரும் விவசாயி களுக்கு பம்ப்செட்டுகளில் உள்ள பழைய மின் மோட்டார்களுக்குப் பதிலாக 50 சதவீத மானியத்தில் புதிய மின்மோட்டார்களும் 5 ஆண்டுகளில் மாற்றி அமைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

14. 1 லட்சத்து 5 ஆயிரத்து 494 கைத்தறி நெசவாளர்களுக்கும், 90 ஆயிரத்து 547 விசைத்தறி நெசவாளர்களுக்கும், சிறப்புத் தொகை செலுத்தி மின் இணைப்பு பெற்ற 2 லட்சத்து 39 ஆயிரத்து 511 விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம். மேலும், 2 லட்சம் பம்ப் செட்டுகளுக்கும் இலவச மின்சார இணைப்பு படிப்படியாக வழங்கிட ஆணையிடப்பட்டு வழங்கப்படுகிறது.

15. விவசாயத் தொழிலாளர் நல வாரியம் உட்பட 35 அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்களில் 2 கோடியே 13 லட்சத்து 55 ஆயிரத்து 884 உறுப்பினர்கள் சேர்ப்பு.

16. 21 லட்சத்து 41 ஆயிரத்து 692 அமைப்புசாராத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 1011 கோடியே 62 லட்சத்து 81 ஆயிரத்து 687 ரூபாய் உதவித் தொகை.

17. தென்னை விவசாயிகளின் நலன்களை மேம்படுத்திட திரு. ச. ராஜ்குமார் மன்றாடியார் தலைமையில் 27.8.2010 அன்று தென்னை விவசாயிகள் நல வாரியம் அமைப்பு.

18. 3742 கோடியே 42 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய்ச் செலவில் ஒரு கோடியே 72 லட்சத்து 80 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி கள் வழங்க முடிவு செய்யப்பட்டு, இதுவரை ஒரு கோடியே 62 லட்சத்து 59 ஆயிரத்து 526 குடும்பங் களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

19. 661 கோடி ரூபாய்ச் செலவில் 29 லட்சம் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

20. 1 லட்சத்து 79 ஆயிரத்து 2 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகள் குடும்பங்களுக்கு 2 லட்சத்து 12 ஆயிரத்து 995 ஏக்கர் இலவச நிலம்.

21. 8 லட்சத்து 30 ஆயிரத்து 495 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள்.

22. காமராஜர் பிறந்த நாளில் “கல்வி வளர்ச்சி நாள்” என பள்ளிகளில் கல்வி விழா.

23. 2 வயது முதல் 15 வயது வரை உள்ள 73 லட்சம் குழந்தைகள், மாணவ மாணவியருக்கு சத்துணவுடன் வாரம் 5 நாட்களும் முட்டைகள், சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப் பழங்கள்.

24. தமிழ் வழியில் பயிலும் 50 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவியர்க்கு அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் சிறப்புக் கட்டணங்களும், 11 லட்சம் மாணவ, மாணவியருக்கு 10, 12ஆம் வகுப்பு களின் அரசுத் தேர்வுக் கட்டணங்களும் ரத்து.

25. பட்டப்படிப்பு பயிலும் 3 லட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவியரின் படிப்புக் கட்டணங்கள் ரத்து, 2010-2011 முதல் எம்.ஏ., எம்.எஸ்சி., வகுப்புகளுக்கும் படிப்புக் கட்டணங்கள் ரத்து.

26. படிப்பைத் தொடர இயலாமல் இடையில் நிறுத்திய ஏழை மாணவர்களில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் வேலை வாய்ப்புகளுக்கேற்ற தொழிற் பயிற்சிகளைச் சமுதாயக் கல்லூரிகள் மூலம் பெற, ஒரு கோடி ரூபாய் செலவில் திறந்த நிலைப் பல்கலைக் கழகம் மூலம் தலா ஆயிரம் ரூபாய் உதவித் தொகை.

27. ஆண்டுதோறும் 24 லட்சத்து 82 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கும், 4 லட்சத்து 35 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ்.

28. ஏழை மகளிர்க்கு பட்டப்படிப்பு வரை வழங்கப்பட்ட இலவசக் கல்வி, முதுகலைப் பட்டப் படிப்பு வரை நீட்டிப்பு.

29. தொழிற்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து.

30. பட்டதாரிகள் இல்லாக் குடும்பங்களிலிருந்து ஒற்றைச் சாளர முறையில் தொழிற் கல்லூரிகளில் சேரும் முதல் தலைமுறை மாணவர் களுக்குக் கல்விக் கட்டணம் 20 ஆயிரம் ரூபாய் ரத்து செய்யப்பட்டு முதலாண்டில் 67 ஆயிரத்து 405 மாணவ மாணவியரும் இரண்டாம் ஆண்டு நேரடிச் சேர்க்கையில் 10 ஆயிரத்து 750 மாணவ மாணவியரும் பயன்பெற்றனர்.

31. பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர் களுக்கான குறைந்தபட்ச மதிப்பெண் வெகுவாகக் குறைக்கப்பட்டு அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்து பயில்கின்றனர்.

32. சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை ஆகிய இடங்களில் 5 புதிய அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகங்கள்.

33. 2006க்குப்பின், ஒரத்தநாடு, பெரம்பலூர், வால்பாறை, சுரண்டை, குளித்தலை, லால்குடி, மேட்டூர், புதுக்கோட்டை, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், பென்னாகரம், திருப்பத்தூர் (வேலூர்), வேதாரண்யம் ஆகிய 14 இடங்களில் அரசின் புதிய கலை அறிவியல் கல்லூரிகள்.

34. “மாவட்டத்திற்கொரு மருத்துவக் கல்லூரி” கோட்பாட்டின்படி விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்.

35. அரசு பொறியியல் கல்லூரிகள் இல்லா திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, அரியலூர், திருக்குவளை, இராமநாதபுரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகள்.

36. பத்தாம் வகுப்புவரை பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயப் பாடமெனச் சட்டம்.

37. நூறாண்டுக் கனவை நனவாக்கிச் “செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்” சென்னையில் அமைப்பு.

38. உலகெங்கும் வாழும் தமிழர்கள் உவக்க கோவை மாநகரில் 2010 ஜூன் திங்களில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு.

39. தஞ்சையில் 2010 செப்டம்பரில் மாமன்னர் இராஜராஜனின் தஞ்சைப் பெரிய கோயில் 1000-ம் ஆண்டு நிறைவு விழா.

40. அருந்தமிழ்ச் சான்றோர் 113 பேரின் நூல்கள் நாட்டுடைமை, 7 கோடியே 61 லட்சம் ரூபாய் பரிவுத் தொகை.

41. நலிந்த கலைஞர்களுக்கான நிதியுதவித் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட நிதியுதவி மாதம் 500 ரூபாய் என்பது 1.9.2006 முதல் 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. 2006-க்குப்பின் புதிதாக 2500 நலிந்த கலைஞர்களுக்குத் தலா ஆயிரம் ரூபாய் வீதம் உதவித் தொகை வழங்க அனுமதிக்கப்பட்டு இதுவரை 9 ஆயிரத்து 563 கலைஞர்கள் இத்திட்டத்தின்கீழ் பயன் பெற்றுள்ளனர். இவர்களில், தற்போது 5 ஆயிரத்து 41 கலைஞர்கள் நிதியுதவி பெறுகின்றனர்.

42. தமிழறிஞர்கள் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் 999 தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் 15 ரூபாய் மருத்துவப் படியும், 528 தமிழறிஞர்களின் மரபுரிமையர்களுக்கு மாதம் 1500 ரூபாய் குடும்ப ஓய்வூதியமும் 15 ரூபாய் மருத்துவப் படியும் வழங்கப்படுகிறது.

43. எல்லைக் காவலர்கள் 339 பேருக்கு மாதந்தோறும் 4 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம், 15 ரூபாய் மருத்துவப்படியும், 166 எல்லைக் காவலர்களின் மரபுரிமையர்களுக்கு மாதம் 2000 ரூபாய் குடும்ப ஓய்வூதியமும் 15 ரூபாய் மருத்துவப்படியும் வழங்கப்படுகிறது.

44. 4,724 திருக்கோவில்களில் 523 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன.

45. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவித் திட்டம் உட்பட அனைத்துத் திருமண உதவித் திட்டங்களின் நிதியுதவி 10 ஆயிரம் ரூபாய் என்பது 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, 4 லட்சத்து 67 ஆயிரத்து 419 ஏழைப் பெண்களுக்கு 882 கோடியே 6 லட்சம் ரூபாய் நிதியுதவி.

46. ஏழைக் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தலா 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவித் திட்டத்தின்கீழ் 25 லட்சத்து 76 ஆயிரத்து 612 ஏழை மகளிர்க்கு மொத்தம் 1389 கோடியே 42 லட்சம் ரூபாய் நிதியுதவி.

47. 50 வயது கடந்து திருமணமாகாமல் வறுமையில் வாடும் 12 ஆயிரத்து 904 ஏழைப் பெண்களுக்கு மாதம் 500 ரூபாய் உதவித் தொகை.

48. “வருமுன் காப்போம் திட்டம்” மீண்டும் செயல்படுத்தப்பட்டு 18 ஆயிரத்து 742 மருத்துவ முகாம்களில் ஒரு கோடியே 77 லட்சத்து 5 ஆயிரத்து 85 பேர் ஏழை எளியோர் பயன்.

49. தமிழகத்தில் உள்ள 1,421 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், புதிதாக உருவாக்கப்பட்ட 116 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தலா மூன்று செவிலியர்களைப் பணியமர்த்தி, 24 மணிநேரமும் மருத்துவ சேவை அளிப்பதால், அங்கு 2005-2006-ல் நடைபெற்ற மகப்பேறுகளின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 532 என்பது, 2009-2010-ல் 2 லட்சத்து 98 ஆயிரத்து 853 ஆக மூன்று மடங்கு உயர்ந்து கிராமப்புற மகளிர் மகிழ்ச்சியடைந்தனர்.

50. குழந்தைகள் உயிர் காத்திட மூடிய அறுவை சிகிச்சைக்கு 20 ஆயிரம் ரூபாய், சாதாரண திறந்த அறுவை சிகிச்சைக்கு 50 ஆயிரம் ரூபாய், கடினமான திறந்த அறுவை சிகிச்சைக்கு 1 லட்சம் ரூபாய் என அரசு நிதி உதவி வழங்கப்படுகிறது. 21.11.2007-ல் தொடங்கப்பட்ட இளம் சிறார் இருதய அறுவை சிகிச்சைத் திட்டம், 3.6.2008-ல் தொடங்கப் பட்ட பள்ளிச் சிறார் இருதய அறுவை சிகிச்சைத் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களின்கீழ் 3264 சிறார்க்கு 17 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் புகழ்வாய்ந்த 28 தனியார் மருத்துவமனைகளின் மூலம் இருதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, குழந்தைச் செல்வங்களின் அரிய உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

51. கிராமப்புற ஏழைகளுக்கும் உடனடி மருத்துவ வசதி கிடைக்கச் செய்திட இ.எம்.ஆர்.ஐ. நிறுவனத்துடன் இணைந்து 15.9.2008-ல் தொடங்கப்பட்ட 445 ஊர்திகளுடன் கூடிய அதிநவீன “அவசர கால மருத்துவ ஊர்தி 108 சேவைத் திட்டம்” தமிழகம் முழுவதும் நடைமுறை, 8 லட்சத்து 8 ஆயிரத்து 907 பேர் பயனடைந்தனர்.

52. அரசு ஊழியர்களுக்கு நான்காண்டுகளில் 2 லட்ச ரூபாய் வரை மருத்துவ உதவி வழங்கும் புதிய “மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்”.

53. “உயிர்காக்கும் உயர்சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்” 2009 ஜூலை முதல் நடைமுறை, 1 கோடியே 34 லட்சம் குடும்பங்கள் பதிவு, இதுவரை 3 லட்சத்து 3 ஆயிரத்து 328 ஏழை மக்களுக்கு 781 கோடியே 40 லட்சம் ரூபாய்ச் செலவில் உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் செய்யப் பட்டுள்ளன.

54. இதய நோய், நீரிழிவு நோய், புற்றுநோய் போன்றவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உடற்பரிசோதனை செய்யும், “நலமான தமிழகம் திட்டம்.”

55. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலனின்றி உயிரிழந்தவர்களின் உடல்களை வீடுகளுக்கு எடுத்துச் செல்ல இலவச அமரர் ஊர்தி சேவைத் திட்டம்.

56. ஏறத்தாழ 2 லட்சத்து 35 ஆயிரத்து 464 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 62 ஆயிரத்து 349 கோடி ரூபாய் முதலீட்டிலான 27 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 24 அரசாணைகள் மூலம் 51 புதிய தொழிற் சாலைகள் அமைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளில் இதுவரை 12 தொழிற்சாலைகள் திறப்பு.

57. 4 லட்சத்து ஓராயிரத்து 704 படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 284 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

58. ஏறத்தாழ 5 லட்சத்து 9 ஆயிரத்து 336 இளைஞர்களுக்கு அரசு அலுவலகங்களில் புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

59. புதுப்பிக்கத் தவறிய 2 லட்சத்து 70 ஆயிரம் இளைஞர்கள் 2001 முதல் பதிவு மூப்புடன் மீண்டும் புதுப்பித்துப் பயனடைந்தனர்.

60. ஆதரவற்ற முதியோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை மாதம் 200 ரூபாய் என்பது 1.9.2006-ல் 400 ரூபாய் எனவும், 24.11.2010 முதல் 500 ரூபாய் என மேலும் உயர்த்தப்பட்டு, மொத்தம் 23 லட்சத்து 71 ஆயிரத்து 370 பேர் மாதம் 500 ரூபாய் வீதம் உதவித்தொகை பெற்றனர்.

61. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்குப் பராமரிப்பு உதவித் தொகை மாதம் 200 ரூபாய் என்பது 500 ரூபாய் என உயர்த்தப்பட்டு, 2006 முதல் ஆண்டுதோறும் 10 ஆயிரம் கடும் மாற்றுத் திறனாளிகள் பயன் பெற்றனர்.

62. 1989-ல் தருமபுரி மாவட்டத்தில் கழக அரசு தொடங்கிய மகளிர் திட்டத்தின்மூலம் இதுவரை உருவாக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் எண்ணிக்கை 5,54,538. இக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கடன் 9 ஆயிரத்து 32 கோடி ரூபாய்.

63. 2006-க்குப்பின் 26 லட்சத்து 95 ஆயிரம் மகளிர் உறுப்பினரைக் கொண்ட 1 லட்சத்து 75 ஆயிரத்து 493 புதிய மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, 7,756.13 கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதாரக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.

64. 2,81,883 மகளிர் குழுக்களுக்கு வழங்கப்பட்ட சுழல் நிதி 281 கோடியே 88 லட்சம் ரூபாய்.

65. மகளிர் சுய உதவிக் குழுக்களைப் போலவே 2006-க்குப்பின் 96 ஆயிரத்து 699 நகர்ப்புற சுயஉதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு 96.70 கோடி ரூபாய் சுழல் நிதி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

66. சுய உதவிக் குழு உறுப்பினர்களாகிய 79,643 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

67. 2,549 கோடி ரூபாய்ச் செலவில் 12 ஆயிரத்து 618 கிராம ஊராட்சிகளில் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள்.

68. அதேபோல, அனைத்துப் பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் 280 கோடி ரூபாய்ச் செலவில் 561 பேரூராட்சிகளில் கட்டமைப்புப் பணிகள், நிதிநிலையில் நலிந்த 30 நகராட்சிகளிலும் தலா 75 லட்சம் ரூபாய்ச் செலவில் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

69. மாநகராட்சி, நகராட்சிகளின் நிதிநிலை மேம்பட்டு மக்களுக்கு வசதிகள் செய்திட அவை அரசுக்குச் செலுத்த வேண்டிய 793 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி.

70. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதிப் பகிர்வு 2006-2007இல் 8 விழுக்காடு, அதாவது 2112 கோடி ரூபாய், 2007-2008-ல் 9 விழுக்காடு, அதாவது 2734 கோடி ரூபாய், 2008-2009-ல் 9 விழுக்காடு, அதாவது 2959 கோடி ரூபாய், 2009-2010-ல் 9.5 விழுக்காடு, அதாவது 3,316 கோடி ரூபாய், 2010-2011-ல் 10 விழுக்காடு என மேலும் உயர்த்தி, 4030 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

71. 12 ஆயிரத்து 94 கோடி ரூபாய்ச் செலவில் 57 ஆயிரத்து 787 கிலோ மீட்டர் நீளச் சாலைகளில் மேம்பாட்டுப் பணிகளும் பராமரிப்புப் பணிகளும் நிறைவேற்றப்பட்டன.

72. 4 ஆயிரத்து 945 கிலோ மீட்டர் நீளமுள்ள ஒரு வழித் தடச் சாலைகள் இடைவெளித் தடங்களாகவும், 2611 கிலோ மீட்டர் ஒரு வழித் தடச் சாலைகள் இருவழித் தடங்களாகவும், 168 கிலோ மீட்டர் நீள இருவழித் தடச் சாலைகள் பல வழித் தடங்களாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

73. மாநில நெடுஞ்சாலைகளில் அகலப்படுத்த இயலாத 32 கிலோ மீட்டர் தவிர ஒரு வழித்தடச் சாலைகளே இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர 11 ஆயிரத்து 219 கிலோமீட்டர் நீளச் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

74. தமிழகத்தில் உள்ள சாலைகளில் 1046 பாலங்கள் மற்றும் 3800 மிகச் சிறுபாலங்கள் 881 கோடி ரூபாய்ச் செலவில் கட்டப்பட்டுள்ளன.

75. தமிழகத்தில் உள்ள 4,676 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகளில் 3,226 கி.மீ நீளச் சாலைகள் 4 வழிச்சாலைகளாக மாற்றப்பட்டு உள்ளன.

76. தலவரி, தலமேல்வரி, தண்ணீர்த் தீர்வை அனைத்தும் ரத்து, நிலவரி, ஏக்கர் ஒன்றுக்குப் புன்செய் நிலங்களுக்கு 15 ரூபாய் என்பது 2 ரூபாய் என்றும், நன்செய் நிலங்களுக்கு 50 ரூபாய் என்பது 5 ரூபாய் என்றும் பெயர் அளவிற்கு மட்டுமே வசூலிக்க அரசு ஆணை.

77. ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்டுள்ளன.

78. அரியலூர், திருப்பூர் புதிய மாவட்டங்கள் உதயம்.

79. தருமபுரி மாவட்டத்தில் அரூர்-புதிய கோட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாம்பரம் புதிய கோட்டம், திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப் பேட்டை புதிய கோட்டம் என மூன்று புதிய கோட்டங்கள்.

80. திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம் பட்டு, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், திருவள்ளூர் மாவட்டம் மாதவரம், கரூர் மாவட்டம் தரகம்பட்டியைத் தலைமை இடமாகக் கொண்டு கடவூர், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, வேலூர் மாவட்டம் ஆம்பூர், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூர், சோழிங்கநல்லூர் என 9 புதிய வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

81. கட்டணம் உயர்த்தப்படாமல் 12 ஆயிரத்து 137 புதிய பேருந்துகளுடன் மேலும் 3000 புதிய பேருந்துகள்.

82. இஸ்லாமியர் சமுதாயம் மேன்மை பெற 3.5 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு.

83. அருந்ததியர் சமூகத்தின் அவலம் தீர 3 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு.

84. சமத்துவ சமுதாயம் காணும்நோக்கில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் நிறைவேற்றப்பட்டு பல்வேறு சாதிகளையும் சார்ந்த 216 பேருக்கு அர்ச்சகர் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

85. அனைத்துச் சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்க ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள 145 பெரியார் நினைவு சமத்துவபுரங்களுடன் மேலும் 95 சமத்துவபுரங்கள் அமைத்து, 240 சமத்துவ புரங்களையும் தந்தை பெரியார் திருவுருவச் சிலைகளுடன் நிர்மாணிக்கும் திட்டம் நடைமுறை, 95 சமத்துவபுரங்களில் இதுவரை 65 சமத்துவபுரங்கள் திறப்பு. 30 சமத்துவபுரங்கள் அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் விடப்பட்டன.

86. சென்னை கோட்டூர்புரத்தில் உலகத் தரத்திலான 179 கோடி ரூபாய்ச் செலவில் “அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்” 15.9.2010-ல் திறப்பு.

87. ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைத் திட 910 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டு, புதிய சட்டமன்ற - தலைமைச்செயலக வளாகம் திறந்து சாதனை.

88. 100 கோடி ரூபாய்ச் செலவில் அடையாறு தொல்காப்பியப் பூங்கா.

89. சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் 8 கோடி ரூபாய்ச் செலவில் உலகத்தரத்திலான “செம்மொழிப் பூங்கா” 24.11.2010-ல் திறப்பு.

90. சென்னை மாநகர் குடிநீர்ப் பற்றாக்குறையை முற்றிலும் தீர்த்திட, வட சென்னை மீஞ்சூரில் “கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்” நிறைவேற்றப்பட்டு, 31.7.2010-ல் திறப்பு.

91. மத்திய அரசு அனுமதித்துள்ள 908 கோடி ரூபாய் நிதியுதவியுடன் தென் சென்னையில் நெம்மேலியில் “கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்,” உருவாகி வருகிறது.

92. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி நிதி உதவியுடன் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “மெட்ரோ ரயில் திட்ட” அமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

93. 1929 கோடி ரூபாய் மதிப்பீட்டில், “ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்”.

94. 630 கோடி ரூபாய்ச் செலவில், “இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றம்”.

95. சென்னைத் துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரை 1,655 கோடி ரூபாய் மதிப்பீட்டில், “பறக்கும் சாலைத் திட்டம்,” பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது.

96. மத சுதந்திரம் பேண - “கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் ரத்து”.

97. “மூன்றாவது காவல் ஆணையம்” மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்டு, அது வழங்கிய 444 பரிந்துரைகளில் இதுவரை 278 பரிந்துரைகள் நடைமுறை.

98. 2 லட்சத்து 12 ஆயிரத்து 981 சத்துணவுப் பணியாளர்கள் பயன்பெற காலமுறை ஊதியம், ஓய்வூதியம்.

99. டெஸ்மா, எஸ்மா சட்டங்களை நீக்கி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பறிக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்கப்பட்டு, 1.1.2006 முதல் தமிழகத்தில் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 155 கோடியே 79 லட்சம் ரூபாய் கூடுதல் செலவில் 6வது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன்காரணமாக, 11 ஆயிரத்து 93 கோடி ரூபாய் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகையாக அனுமதிக்கப்பட்டு புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

100. ஏறத்தாழ 2 லட்சம் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் பயன்பெறும்வகையில் 200 கோடி ரூபாய் கூடுதல் செலவில் ஒரு நபர் குழு பரிந்துரை 1.8.2010 முதல் நடைமுறைபடுத்தப்பட்டது.

101. ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்கி 163 கோடி ரூபாய்ச் செலவில் கூடுதல் சலுகைகள், 2.73 லட்சம் ஆசிரியர்கள் பயனடைந்தனர்.

102. அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத அலுவலர்கள், அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப் படும் ஊர்திப்படி 300 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக 1.10.2010 முதல் உயர்த்தி வழங்கிட ஆணை.

103. 21 லட்சம் குடிசை வீடுகளை 6 ஆண்டு களில் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் “கலைஞர் வீடு வழங்கும் திட்டம்” என்னும் புரட்சிகரமான திட்டம் இவ்வாண்டில் நடைமுறை. நடப்பாண்டில் ஒரு வீட்டிற்கு 75 ஆயிரம் ரூபாய் மானியம் வீதம் 2,250 கோடி ரூபாய்ச் செலவில் 3 லட்சம் வீடுகளைக் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டு, 15.8.2010 முதல் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்குரிய பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

104. இத்திட்டத்தின்கீழ் முதல் வீடு கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வல்லம்படுகை கிராமத்தில் 9.10.2010 அன்று பயனாளிக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இதுவரை 77 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, 60 ஆயிரத்து 486 வீடுகளுக்குப் பயனாளிகள் குடிபுகுந்துள்ளனர். மேலும், 12 லட்சம் பயனாளிகளுக்கு தகுதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக மேலும் 3 லட்சம் குடிசைகள் இத்திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகளாகக் கட்டப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டு 2 லட்சத்து 98 ஆயிரத்து 162 வீடுகள் கட்டு வதற்குப் பணி ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சியைப் பெற்றதற்கான ஆதாரங்களை ஆயிரக்கணக்கில் அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், இங்கே மிகச் சுருக்கமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து, எப்போதெல்லாம் தி.மு.க ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாடு வளர்ச்சி பெறுகிறது என்பதும், எப்போதெல்லாம் அ.தி.மு.க ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் தேக்கநிலை ஏற்படுகிறது என்பதும் தெளிவாகிறது.

போக்குவரத்து துறை

போக்குவரத்து துறை

தொழிற்சாலை பெருக்கம், வணிகம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் வேலை வாய்ப்புகளை விரைந்து பெறுவதற்கு போக்குவரத்து சிறப்பாக இருப்பது முக்கியம். இதை கருத்தில் கொண்டு, கிராமப்புறங்களை முக்கிய சாலைகளுடன் இணைக்கும் இணைப்புச் சாலை திட்டத்தை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி 1976-க்கு முன்பே தீட்டி அதில் வேகமான வளர்ச்சி கண்டது என்பதை அனைவரும் அறிவர்.

அண்ணா தலைமையில் முதன்முறை திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்றுக்கொண்டபோது, நாட்டிலேயே முதன்முறையாகத் தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் பேருந்துகள் நாட்டுடமையாக்கப்பட்டன.

1998 மார்ச் 26-ம் நாள் தமிழக வரலாற்றில் முதன்முறையாக நெடுஞ்சாலைத் துறைக்கென தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டது. தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் தமிழகத்தில் அதிகப்படியான சாலைகளும், பாலங்களும் அமைக்கப்பட்டன. 2000-மாவது ஆண்டு முடியும்போது, தி.மு.க ஆட்சிக் காலத்தில் மட்டும் 345 பாலங்கள் கட்டிமுடிக்கப்பட்டிருந்தன.

1996 – 2001 தி.மு.க ஆட்சிக் காலத்தில் நான்கரை ஆண்டுகளில் மட்டும் 9,477 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு, 1,468 புதிய வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டன. கிராமப்புற மக்கள் வேலைக்குச் சென்றுவர வசதியாக மினி பஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு, 2,334 மினி பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் 2,112 மினி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டன.

பெரிய பாலங்கள்

தமிழக நெடுஞ்சாலைகளில் கலைஞர் ஆட்சியில் உருவான பெரிய பாலங்களில் முதன்மையானவை.

1. 1969 - தஞ்சை - திருச்சி மாவட்டங்களை இணைத்துக் கொள்ளிடம் ஆற்றில் திருமானூர் அருகில் ஒரு பெரிய பாலம்.

2. 1969 - குளித்தலை - முசிறிக்கு இடையில் காவிரிப் பாலம்.

3. 1970 - திருநெல்வேலி சந்திப்புக்கு அருகில் - திருவள்ளூர் பெயரால் ஒரு ஈரோடுக்கு மேம்பாலம்.

4. 1971 - கோவையில் ஒரு மூன்றடுக்கு மேம்பாலம்.

5. 1972 - ஈரோடு - சத்தி சாலையில் ஒரு பாலம்.

6. 1973 - ஒகனேக்கல் சாலையில் சின்னாறு நதியில் பாலம்.

7. 1973 - பொள்ளாச்சி - தாராபுரம் சாலையில் பாலம்.

8. 1973 - தேவிப்பட்டிணம் - திருப்பாலக்குடி சாலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் பாலம்.

9. 1973 - இராமநாதபுரம் மாவட்டத்தில் பொய்யேரி செல்லும் சாலையில் திருமணி ஆற்றில் பாலம்.

10. 1974 - முத்துப்பேட்டை - மீமிசல் சாலையில் அம்புலியாற்றில் பாலம்.

11. 1973 - கல்லார் சிமெண்ட் பள்ளி சாலையில் அரசனூர் ஆற்றில் பாலம்.

12. 1973 - உடுமலைப்பேட்டை - குமாரலிங்கம் சாலையில் அமராவதி ஆற்றில் பாலம்.

13. 1974 - செங்கல்பட்டு அருகில் சூணாம்பேடு சாலையில் பாலம்.

14. 1974 - வேலூர் அருகில் பாலாற்றில் போளூர் சுப்பிரமணியன் பாலம்.

15. 1974 - கடலூர் - சித்தூர் சாலையில் மலட்டாற்றின் குறுக்கே பாலம்.

16. 1974 - பேசின்பிரிட்ஜூக்கு அருகில் பக்கிங்ஹாம் கால்வாயில் அமைந்த பாலமும், அப்பகுதியில் அமைந்துள்ள ஒரு இரயில்வே மேம்பாலமும் அகலப்படுத்திக் கட்டப்பட்டன.

17. 1975 - கடலூரில் - கடற்கரைச் சாலையில் தென்பெண்ணை ஆற்றின் அருகில் கடல் நீர் உள்ளே வரும் பகுதியில் 75 இலட்சம் ரூபாய் செலவில் பாலம்.

இதர பாலங்கள்

1. மதுரை மாவட்டத்தில் மதுரை அண்ணா நகர் 80 அடி சாலையையும், காமராஜர் சாலையையும் இணைத்து வைகை ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் 7 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் 30.4.97 அன்று கட்டி முடிக்கப்பட்டது.

2. மதுரா கோட்ஸ் அருகில் புதிய ஜெயில் சாலையில் ஆறு கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் ஒரு மேம்பாலம் 13.11.99 அன்று கட்டிமுடிக்கப்பட்டது.

3. மதுரை வைகை ஆற்றின் குறுக்கே ஏற்கனவே இருந்த கல்பாலம் தாம்போகிக்கு பதிலாக 8 கோடி ரூபாய் செலவில் ஓர் உயர்மட்டப் பாலம் 23.2.2000 அன்று கட்டிமுடிக்கப்பட்டது.

4. மதுரை சுற்றுச்சாலையில் வைகை ஆற்றின் குறுக்கே 4 கோடி ரூபாய் செலவில் ஓர் உயர்மட்டப்பாலம் 25.5.2000 அன்று கட்டிமுடிக்கப்பட்டது.

5. மதுரை சுற்றுச்சாலையில் வைகை ஆற்றின் குறுக்கே 8 கோடி ரூபாய் செலவில் ஒரு மேம்பாலமும், 6 கோடி ரூபாய் செலவில் மற்றொரு மேம்பாலமும் 15.9.2000 அன்று கட்டிமுடிக்கப்பட்டன.

6. மதுரை மாவட்டம் மேலூர்-பூவந்தி திருப்புவனம் சாலையில் தமிழ்நாடு விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 3 கோடியே 95 இலட்சம் ரூபாய் செலவில் ஒரு பாலம் 31.10.1997 அன்று கட்டிமுடிக்கப்பட்டது.

7. மதுரை - தென்காசி சாலையில் 1 கோடியே 10 இலட்சத்து 38 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பாலம் 30.7.2000 அன்று கட்டி முடிக்கப்பட்டது.

8. திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை - முத்துப்பேட்டை சாலையில் திருவாரூரில் 5 கோடி ரூபாய் செலவில் சாலைகீழ் பாலம் அமைக்கும் பணிகள் 31.8.2000 அன்று முடிவடைந்தன.

9. கடலூர் மாவட்டத்தில் கொத்தாச்சாரி - குண்டியமல்லூர் சாலையில் 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் 31.7.2000 அன்று முடிவடைந்தன.

10. முருகர்குடி - கிள்ளிமங்கலம் சாலையில் வெள்ளாற்றின் குறுக்கே கோடியே 21 இலட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் 31.5.2000 அன்று முடிவடைந்தன.

11. திருவள்ளூர் மாவட்டத்தில் பெரியபாளையம் அருகில் ஆரணி ஆற்றின் குறுக்கே 2 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட உயர்மட்டப் பாலத்தின் பணிகள் 2.1.1999 அன்று முடிவடைந்தன.

12. தண்டலம் - பேரம்பாக்கம் சாலையில் 2 கோடியே 33 இலட்சத்து 96 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் 31.5.2000 அன்று முடிவடைந்தன.

13. திருவொற்றியூர் - பொன்னேரி சாலையில் நாப்பாளையம் அருகில் 1 கோடியே 24 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட உயர்மட்டப் பாலத்தின் பணிகள் 2.1.99 அன்று முடிவடைந்தன.

14. இராமநாதபுரம் மாவட்டத்தில் அபிராமம் - முதுகுளத்தூர் சாலையில் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட உயர்மட்டப் பாலத்தின் பணிகள் 31.10.2000 அன்று முடிக்கப்பட்டன.

15. சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி - மறவமங்கலம் சாலையில், 1 கோடியே 29 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் 31.3.2000 அன்று முடிவடைந்தன.

16. இளையான்குடி - மறவமங்கலம் சாலையில், 1 கோடியே 11 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மற்றொரு பாலத்தின் பணிகள் 30.8.2000 அன்று முடிவடைந்தன. அதே இளையான்குடி - மறவமங்கலம் சாலையில் 2 கோடியே 22 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஓர் உயர் மட்டப் பாலத்தின் பணிகள் 30.9.2000 அன்று முடிவடைந்தன.

17. திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசியிலிருந்து கொடநல்லூர் சேதாரக்குப்பம் சாலை வழியாக ஓசூர் செல்லும் சாலையில் 1 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட உயர்மட்டப் பாலத்தின் பணிகள் 30.4.2000 அன்று முடிவடைந்தன.

18. புதுப்பாளையம் சாலையில் 1 கோடியே 26 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பாலத்தின் பணிகள் 30.9.2000 அன்று முடிவடைந்தன. போளூர் ஜமுனாமத்தூர் ஆலங்காயம் சாலையில் 1 கோடியே 7 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் 31.5.2000 அன்று முடிவடைந்தன.

19. சென்னையில் ராயபுரத்தில் இரண்டு இருப்புப் பாதைக் கடவுகளுக்குப் பதிலாக 17 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மிகப்பெரிய மேம்பாலத்தின் பணிகள் 15.11.1999 அன்று முடிவடைந்தன.

20. கிண்டி இரயில் நிலையத்தின் அருகில் 5 கோடியே 52 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மேம்பாலத்தின் பணிகள் 30.4.2000 அன்று முடிவடைந்தன

21. சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து 7வது கிலோமீட்டரில் 3 கோடியே 22 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் 31.3.1998 அன்று முடிவடைந்தன.

22. திருச்சி மாவட்டத்தில் 8 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் தில்லைநகர் சாலையையும், கரூர் புறவழிச்சாலையினையும் இணைக்கும் இணைப்புச் சாலையும், அதில் அமைந்துள்ள பாலத்தின் கட்டுமானப் பணிகளும் 31.12.99 அன்று முடிவடைந்தன.

23. திருச்சி - நாமக்கல் சாலையில் 2 கோடியே 8 இலட்சம் ரூபாய் செலவில் விரிவுபடுத்திக் கட்டப்பட்ட ஒரு பாலத்தின் பணிகளும், அதே சாலையில் 1 கோடியே 26 இலட்சம் ரூபாய் செலவில் விரிவுபடுத்திக் கட்டப்பட்ட ஒரு பாலத்தின் பணிகளும் 31.10.2000 அன்று முடிவடைந்தன.

24. திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி நகரில் மதுரை - கன்னியாகுமரி புறவழிச்சாலையுடன் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே 8 கோடி ரூபாய் செலவில் ஓர் உயர்மட்டப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் 31.12.99 அன்று முடிவடைந்தன.

25. கோவை மாவட்டத்தில், கோவை நகராட்சி சாலையை மேம்பாடு செய்து, நொய்யல் ஆற்றின் குறுக்கே 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பாலத்தின் பணிகள் 28.5.99 அன்று முடிவடைந்தன. கோவை பெரிய கடைவீதியில் அமைந்துள்ள கீழ்வழிப் பாதை 3 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுப் பணிகள் 15.11.99 அன்று முடிவடைந்தன.

26. பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலாத்துக்கரை - கோலக்காநத்தம் சாலையில் 1 கோடியே 17 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவில் விரிவுபடுத்திக் கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் 31.10.2000 அன்று முடிவடைந்தன.

27. கிருஷ்ணாபுரம் - பூலாம்பாடி சாலையில் 1 கோடியே 10 இலட்சத்து 38 ஆயிரம் ரூபாய் செலவில் விரிவுபடுத்திக் கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் 31.7.2000 அன்று முடிவடைந்தன.

28. விழுப்புரம் மாவட்டத்தில் வேட்டைக்காடு - கயத்தாறு சாலையில் 1 கோடியே 26 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் 30.9.2000 அன்று முடிவடைந்தன. விழுப்புரம் - சென்னை சாலையில் கீழ்பெரும்பாக்கத்தில் இருப்புப் பாதைக் கடவுகளுக்குப் பதிலாக 6 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கீழ்பாலத்தின் பணிகள் 31.3.2000 அன்று முடிவடைந்தன.

29. விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி - கழுகு மலைச் சாலையில் 1 கோடியே 9 இலட்சம்ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பாலத்தின் பணிகள் 31.8.2000 அன்று முடிவடைந்தன.

30. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழவந்தாங்கல் இரயில் நிலையத்தின் அருகில் 4 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இரயில்வே கீழ் பாலத்தின் பணிகள் 2.6.1997 அன்று நிறைவேறின. மதுராந்தகம் - வெண்நாகுபட்டு சாலையிலிருந்து தச்சூர் செல்லும் சாலையில் 1 கோடியே 10 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் விரிவுபடுத்திக் கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் 31.8.2000 அன்று முடிவடைந்தன.

31. தருமபுரி மாவட்டத்தில் காவேரிப்பட்டினம் - காக்கன்கரை சாலையில் 5 கோடியே 4 இலட்சம் ரூபாய் செலவில் ஹட்கோ உதவித் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் 31.5.2000 அன்று முடிவடைந்தன.

32. வேலூர் மாவட்டத்தில் 4 கோடி ரூபாய் செலவில் அம்முண்டி பூட்டுதாக்குச் சாலையில் ஒரு புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகளும், பூட்டுதாக்கு தாம்போகி சாலையில் விரிவுபடுத்திக் கட்டப்பட்ட பாலத்தின் பணிகளும் 31.5.2000 அன்று முடிவடைந்தன.

33. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை ஏம்பல் சாலையில் 1 கோடியே 49 இலட்சம் ரூபாய் செலவில் விரிவுபடுத்திக் கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் 31.5.2000 அன்று முடிவடைந்தன.

34. கரூர் மாவட்டத்தில் பள்ளப்பட்டு - மண்மாரி சாலையில் 1 கோடியே 16 இலட்சம் ரூபாய் செலவில் விரிவுபடுத்திக் கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் 31.5.2000 அன்று முடிவடைந்தன.

35. சேலம் மாவட்டத்தில் சேலம் புறவழிச் சாலையில் 1 கோடியே 13 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பாலத்தின் பணிகள் 30.4.2000 அன்று முடிவடைந்தன.

36. கொன்னன் செட்டி - ராஜபட்டினம் சாலையில் 1 கோடியே 35 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் 31.3.2000 அன்று முடிவடைந்தன.

சாலை வசதிகள்

1. 1972-ம் ஆண்டு 1,500-க்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமங்களுக்கு இணைப்புச் சாலைகள் அமைக்கும் திட்டம் கழக அரசினால் அறிமுகம் செய்யப்பட்டது.

2. 1990-ம் ஆண்டு 1,000-க்கும் மேல் மக்கள் தொகை கொண்ட அனைத்துக் கிராமங்களுக்கும் இத்திட்டம் விரிவாக்கப்பட்டது.

3. இத்திட்டத்தின் கீழ் 1996-ம் ஆண்டுக்கு பிறகு, 517 கிராமங்கள் இணைப்புச் சாலை வசதிகளைப் பெற்றன.

4. இணைப்புச் சாலை வசதி இல்லாத 1,000 பேருக்கு மேல் மக்கள் தொகை கொண்ட கிராமங்களே தமிழகத்தில் இல்லை என்ற சாதனை படைக்கப்பட்டது.

5. இணைப்புச் சாலைகள் உருவாக்கும் திட்டத்தின் தொடர்ச்சியாக 1999-2000-ம் ஆண்டுகளில் முதற்கட்டமாக 500-க்கு மேல் 1000-க்குள் மக்கள் தொகை கொண்ட 340 கிராமங்களுக்கு ரூ.123.70 கோடி செலவில் இணைப்புச் சாலைகள் அமைக்கப்பட்டன. 2000 - 2001-ம் ஆண்டுகளில் ரூ.90.75 கோடி செலவில் 140 கிராமங்களுக்கு இணைப்புச் சாலைகள் அமைக்கப்பட்டன.

6. நபார்டு வங்கி உதவியில் ரூ.410.23 கோடி மதிப்பீட்டில் 4976.20 கி.மீ. நீள ஊரகச்சாலைகள் எடுக்கப்பட்டு, 4053 கி.மீ. நீளப் பணிகள் 294.30 கோடி ரூபாயில் முடிக்கப்பட்டன. 4154.15 கி.மீ. நீள மாவட்ட பெரிய சாலைகள் மற்றும் இதர மாவட்டச் சாலைகளின் பணிகள் ரூ.271.09 கோடி மதிப்பீட்டில் எடுக்கப்பட்டு, 3588 கி.மீ. நீளப் பணிகள் முடிக்கப்பட்டன.

7. 1977-ம் ஆண்டுக்குப் பின் சாலைப் பணியாளர்கள் நியமிக்கப்படாததால் நெடுஞ்சாலைகள் சரிவரப் பராமரிக்கப்படவில்லை. இக்குறையைப் போக்கிட 1998-99-ல் 10,000 சாலைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

புறவழிச்சாலைகள்

1. ரூ.49.85 கோடி செலவில் இரண்டு பெரிய பாலங்கள் உட்பட 18.80 கி.மீ. நீள தாம்பரம் - மதுரவாயல் - சென்னை புறவழிச்சாலைப் பணிகள் அமைக்கப்பட்டன.

2. 24.70 கி.மீ. நீள சாலைப் பணிகளும், 3 மேம்பாலப் பணிகளும் அடங்கிய மதுரை சுற்றுச்சாலை அமைக்கும் பணி ரூ.47.35 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டது.

3. ரூ.110 கோடி செலவில் 28.40 கி.மீ. நீளக் கோவை புறவழிச்சாலை அமைக்கப்பட்டு, போக்குவரத்திற்குத் திறந்து விடப்பட்டுள்ளது.

4. 1841.33 கி.மீ. நீள சாலைப் பணிகள் இயந்திரம் மூலம் தார்ச்சாலைகளைப் புதுப்பித்தல் திட்டத்தின்கீழ் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

5. பன்மாநில முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதாரத் திட்டத்தின்கீழ், திருப்பூர் நகர் மற்றும் அதன் சுற்றுப்புறச் சாலை மேம்பாட்டுப் பணிகளில் 57.80 கி.மீ. சாலைப் பணிகளும், ஓர் உயர்மட்டப் பாலமும் ரூ.15.60 கோடியில் முடிக்கப்பட்டன.

6. கரும்புச்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 210 கி.மீ. நீள சாலை ரூ.17.19 கோடி மதிப்பீட்டில் மேம்பாடு செய்யப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலைகள்

1. 1946-ம் ஆண்டில் தமிழகத்திலிருந்த தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 1,637 கிலோமீட்டர். 1991-ம் ஆண்டில் 2002 கி.மீ. 1996-ம் ஆண்டிலும் 2002 கிலோ மீட்டர் மட்டுமே. ஆனால், தி.மு.க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக, 2000-மாவது ஆண்டில் மொத்த தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 3864 கிலோமீட்டர்களாக அதிகரித்தது.

தேசிய நெடுஞ்சாலைகளில் கழக அரசு அமைத்த இன்றியமையாத பாலங்கள்:

1. 1969 - திண்டிவனம் அருகே சங்கராபரணி ஆற்றில் 220 மீட்டர் நீளத்திற்குப் பெரிய பாலம்.

2. 1971 - மதுரை - திண்டுக்கல் புறவழிச் சாலையில் வைகை ஆற்றின் குறுக்கே பாலம்.

3. 1971 - மதுரை ஆண்டாள்புரம் அருகே முத்துராமலிங்கத் தேவர் மேம்பாலம்.

4. 1971 - மதுரை கல்லூரி அருகே மேயர் முத்து மேம்பாலம்.

5. 1972 - காரனோடை அருகில் குசத்தலை ஆற்றில் 400 மீட்டர் பாலம்.

6. 1972 - தருமபுரி - திருப்பத்தூர் சாலையில் தென்பெண்ணை ஆற்றில் இருமாத்தூர் அருகே பாலம்.

7. 1972 - திருச்சிக் கரையாற்றில் 113 மீட்டர் பாலம்.

8. 1972 - மதுரை - அருப்புக்கோட்டை சாலையில் பாலம்.

9. 1973 - சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள அண்ணா மேம்பாலம்.

10. 1974 - கும்மிடிப்பூண்டி அருகே ஆரணியாற்றில் 123 மீட்டர் பாலம்.

11. 1974 - சென்னை ஆர்.கே.மடம் சாலையில் பாலம்.

12. 1974 - உளுந்தூர்பேட்டை அருகில் கடிலம் ஆற்றில் 321 மீட்டர் பாலம்.

13. 1974 - சென்னை அடையாற்றில் திரு.வி.க. பாலம்.

14. 1974 - திருப்பூர் நகரில் பாலம்.

15. 1974 - திண்டுக்கல் அருகில், சென்னை திருச்சி திண்டுக்கல் - தேசிய நெடுஞ்சாலையில் சாதனையாற்றின் குறுக்கே 72 மீட்டர் நீளத்திற்குப் பாலம்.

16. 1974 - திண்டுக்கல் வட்டாணம் சாலையில் பாலம்.

17. 1974 - விருதுநகர் அருகே கவுசிக ஆற்றின் குறுக்கே 101 மீட்டர் நீளத்திற்குப் பாலம்.

18. 1974 - இராமேஸ்வரத்தில் ஆசியாவிலேயே பெரிய பாம்பன் பாலம் (பணி துவக்கம்).

19. 1975 - மணப்பாறை அருகே - சித்தனாதன் ஆற்றின் குறுக்கே 132 மீட்டர் பாலம்.

20. 1975 - திருச்சி சமயபுரம் அருகே - உப்பாற்றில் 105 மீட்டர் பாலம்.

21. 1975 - மார்த்தாண்டம் பனிச்சம்மோடு சாலையில் குழித்துறை ஆற்றில் பாலம்.

22. 1989 - மாமண்டூர் அருகில் தாக்குபேட்டையில் என்.எச்.45 தேசிய நெடுஞ்சாலையில் 90 மீட்டர் பாலம்.

23. 1989 - அதே மாமண்டூர் அருகில் கிள்ளியாற்றில் 175 மீட்டர் பாலம்.

24. 1989 - செங்கல்பட்டு அருகில் பாலாற்றின் குறுக்கே 686 மீட்டர் பாலம்.

மாநில நெடுஞ்சாலைகள்

1991-92-ல் மாநில நெடுஞ்சாலைகளின் நீளம் 1896 கி.மீ. 1995-96-ல் வெறும் 62 கிலோமீட்டர்களே அதிகரித்து 1,934 கிலோமீட்டர்களாக இருந்தது. 1996-ம் ஆண்டுக்குப் பிறகு தி.மு.க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 4192 கிலோமீட்டர்களாக அதிகரித்தது.

சென்னையில் தி.மு.க அரசு உருவாக்கிய பாலங்கள்

1. 1973 - சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணா மேம்பாலம். 1974 சென்னை ஆர்.கே. மடம் சாலையில் அமைந்துள்ள பாலம்.

2. 1974 - சென்னை அடையாற்றில் திரு.வி.க. பாலம்.

3. 1974 - சைதாப்பேட்டையில் மர்மலாங் பாலம் அகலப்படுத்தப்பட்டு மறைமலை அடிகள் பாலம் எனப் பெயரிடப்பட்டடது.

4. 1974 - துரைசாமி சாலையில் மாம்பலம் - கோடம்பாக்கம் இரயில் நிலையங்களுக்கு இடையில் சிவலிங்கம் கீழ் பாலம்.

5. 1974 - பேசின்பிரிட்ஜூக்கு அருகில் பக்கிம்ஹாம் கால்வாயில் அமைந்த பாலமும், அப்பகுதியில் அமைந்துள்ள ஒரு ரயில்வே மேம்பாலமும் 36.05 இலட்சம் ரூபாய் செலவில் அகலப்படுத்தப்பட்டது.

6. 1989 – அண்ணா சாலையில் பெரியார் சிலை அருகே கூவம் பாலம் அகலப்படுத்தப்பட்டுப் பெரியார் பாலம் எனப் பெயர் சூட்டப்பட்டது.

7. 1989 - சென்னை விம்கோ நகர் - எண்ணூர் ரயில் நிலையங்களுக்கிடையில் 2.15 கோடி ரூபாய் செலவில் ஒரு இரயில்வே மேம்பாலம்.

8. 1990 - சென்னை - கல்கத்தா சாலையில் மூலக்கடை அருகில் பாலம்.

9. 1999 - நேப்பியர் பாலம் 5.11 கோடி செலவில் விரிவாக்கப்பட்டுள்ளது.

10. 1999 - ராயபுரத்தில் 17 கோடி ரூபாய் செலவில் 1010 மீட்டர் நீளமுள்ள பெரிய மேம்பாலம்.

சென்னை மாநகரில் 10 மேம்பாலங்கள்

இதேபோல், சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுத்தவர் தளபதி ஸ்டாலின் மட்டுமே. அவரது பதவிக் காலத்தில், நெரிசல் மிகுந்த 10 சாலைகளில் மேம்பாலங்கள் கட்ட முடிவெடுக்கப்பட்டு, பதவிக்காலம் முடியும் முன்பே.

1. பீட்டர்ஸ் சாலை – கான்ரான் ஸ்மித் சாலை சந்திப்பு.

2. பீட்டர்ஸ் சாலை – வெஸ்ட்காட் சாலை சந்திப்பு.

3. பாந்தியன் சாலை – காசா மேஜர் சாலை சந்திப்பு.

4. புரசைவாக்கம் நெடுஞ்சாலை – ஆண்டர்ஸ் சாலை சந்திப்பு.

5. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை – இராயப்பேட்டை நெடுஞ்சாலை சந்திப்பு.

6. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை – டி.டி.கே சாலை சந்திப்பு.

7. டி.டி.கே.சாலை – சி.பி.ராமசாமி சாலை சந்திப்பு.

8. சர்தார் பட்டேல் சாலை – டாக்டர் முத்துலட்சுமி சாலை சந்திப்பு.

9. சர்தார் பட்டேல் சாலை – காந்தி மண்டபம் சாலை சந்திப்பு ஆகிய 9 மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டன.

மேம்பாலங்கள் கட்ட 95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்த்து. ஆனால், மேம்பாலங்கள் திறந்து வைக்கப்பட்டபோது 30% நிதி மீதம் இருந்தது.

தலைவர் ஸ்டாலின் அவர்களது நிர்வாகத் திறமை, நிதி மேலாண்மை ஆகியவற்றுக்கு இதுவே மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

இந்தியாவில், இவ்வளவு குறுகிய காலத்தில் எந்த ஒரு மாநகராட்சியும் இத்தகைய மேம்பாலங்களை கட்டி முடித்ததில்லை.

10-வதாக கட்டிமுடிக்கப்பட்ட பெரம்பூர் ரயில் நிலையம் அருகேயுள்ள மேம்பாலம் பின்னர் திறந்துவைக்கப்பட்டது.

இன்று, சென்னை மக்கள் ஓரளவேணும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணிக்க முடிகிறதென்றால், அதற்கும் மு.க.ஸ்டாலின் மட்டுமே காரணம்.

அதேபோல், கட்டணம் உயர்த்தப்படாமல் 12 ஆயிரத்து 137 புதிய பேருந்துகளுடன் மேலும் 300 புதிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டதும், ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கி நிதியுதவியுடன் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டது திமுக ஆட்சிக் காலத்தில் தான்.

1989-90-ம் ஆண்டுத் தி.மு.க அரசின் முதன்மை மேம்பாலங்கள்

1. சென்னை விம்கோ நகர் - எண்ணூர் இரயில் நிலையங்களுக்கிடையில் ஒரு இரயில்வே மேம்பாலம்.

2. மாயூரம் சாரங்கபாணி மேம்பாலம்.

3. திருவாரூர் மேம்பாலம்.

4. கும்பகோணம் இரயில்வே மேம்பாலம்.

5. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை முத்துப்பேட்டை சாலையில் ஒரு மேம்பாலம்.

6. கோவையில், கிராஸ்கட் சாலையில் மேம்பாலம்.

7. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆர்க்காடு - விழுப்புரம் சாலையில் ஒரு மேம்பாலம்.

8. கோவை - சத்தியமங்கலம் காமராஜ் நகர் சாலையில் ஒரு பாலம்.

9. கோவை - சிறுவாணி சாலையில் பாலம்.

10. கிழக்குக் கடற்கரைச் சாலையில் வயலூர் அருகில் பாலாற்றில் 61 இலட்சம் ரூபாய் செலவில் ஒரு பாலம்.

11. ஊட்டி அருகில் கன்னிக்கோடு - கூடலூர் சாலையில் பாலம்.

12. நெல்லை மாவட்டத்தில் கோதை ஆற்றில் அம்பாசமுத்திரம் - பாப்பாக்குடி இடையில் ஒரு பாலம்.

13. மயிலாடுதுறை - முத்துப்பேட்டை சாலையில் பழைய பாலம் ஒன்று புதுப்பித்து அமைக்கப்பட்டது.

14. மதுரை - தூத்துக்குடி சாலையில் விருதுநகருக்கு அருகில் உள்ள பாலம் புதுப்பிக்கப்பட்டது.

15. விருதுநகர் மாவட்டத்தில் - அர்ச்சுனா ஆற்றில் சிவகாசி - விருதுநகர் சாலையில் ஒரு உயர்மட்ட பாலம். விழுப்புரம் - கும்பகோணம் சாலையில் கடலூர் அருகில் பாலம்.

16. கோவை - திண்டுக்கல் சாலையில் கோவைக்கு அருகே பாலம்.திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகில் ஒரு பாலம்.

17. மதுரை - தென்காசி சாலையில் பாலம்.

18. ஆம்பூருக்கு அருகில் பாலாற்றில் ஒரு பாலம்.

19. விருதுநகருக்கு அருகில் அர்ச்சுனா ஆற்றில் குறுக்கே மேலும் ஒரு பாலம்.

20. பழனி - தாராபுரம் மேற்கு சாலையில் - மானூர் அருகில் சண்முகாநதி குறுக்கே ஒரு பாலம் என ஏராமான பாலங்களும் சாலைகளும் தி.மு.க ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டன.

தகவல் தொழில்நுட்ப துறை சாதனைகள்

தகவல் தொழில்நுட்பத் துறை முன்னோடி

இந்தியாவிலேயே, தகவல் தொழில்நுட்பத் துறையில் தனி முத்திரை பதித்தது கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசுதான். 1998-ம் ஆண்டு, அக்டோபர் 5-ம் நாள், தகவல் தொழிற்நுட்பத்துக்கென்றே சென்னை தலைமைச் செயலகத்தில் தனியே ஒரு துறை தி.மு.க ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு, ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் செயல்படத் தொடங்கியது.

இந்தியாவிலேயே முதல் முறையாக தகவல் தொழிற்நுட்பத்துக்கென்று தனிக் கொள்கை (I.T.Policy) ஒன்றும் தி.மு.க ஆட்சியில் உருவாக்கப்பட்டது. இக்கொள்கை, தகவல் தொழிற்நுட்பத் தொழில் முனைவோர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்தியாவிலேயே, தகவல் தொழிற்நுட்ப வளர்ச்சிக்கென, தனிக் கொள்கை உருவாக்கி அறிவித்த முதல் மாநிலமும் தமிழ்நாடுதான்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையிலான மென்பொருள் பொறியியல் வல்லுநர்கள் வேலை செய்து வருகிறார்கள். 2000-மாவது ஆண்டிலேயே தமிழகம் இந்த நிலையை எட்டிவிட்டது. தி.மு.க அரசின் சிறப்பான செயல்பாடுகளே இதற்குக் காரணம்.

1998 செப்டம்பர்வரை சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகம், 21,371 பேருக்கு விசா வழங்கியது. இதே காலகட்டத்தில் மும்பை தூதரகம் 9,734 பேருக்கும், புதுதில்லி தூதரகம், 5,460 பேருக்கும், கொல்கத்தா தூதரகம் 1,367 பேருக்கும் விசாக்களை வழங்கின. விசா பெற்றோரில் பெரும்பாலானோர் மென்பொருள் பட்டதாரிகள். இது, மற்ற மாநிலங்களைவிடத் தமிழகத்தில் இருந்துதான் அதிகம் பேர் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு கிடைத்து வெளியே செல்கின்றனர் என்பதை எடுத்துக் காட்டியது.

2000-மாவது ஆண்டு கழக ஆட்சியின்போது, 340 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டைடல் மென் பொருள் பூங்கா சென்னை தரமணியில் உருவாக்கப்பட்டு அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 12 லட்சம் சதுர அடி பரப்பளவுடன், தரை தளம், 12 மேல் தளங்கள், 2 தரைகீழ் தளங்கள் கொண்ட டைடல் பூங்காவில் இருந்து தரை வழியாகவும், செயற்கைக்கோள் வழியாகவும், நுண்ணலைகள் வழியாகவும் செய்திகளை பரிமாறிக் கொள்வதற்கு ஏற்ப வசதிகள் செய்துகொடுக்கப்பட்டன. இங்கு, ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.

முழுவதும் குளிர்ப்பதனப்படுத்தப்பட்ட டைல் பூங்காவில் மின்சாரத்தை சிக்கனப்படுத்துவதற்காக, இந்தியாவிலேயே முதல் முறையாக “Thermal Energy Storage System” அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது இந்த “மின்தொகுப்பு முறை” உலகிலேயே மூன்றாவது பெரியது அமைப்பாக விளங்கியது.

இதேபோல், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள சிறுசேரியில், 1,000 ஏக்கர் பரப்பளவில், பன்னாட்டுத் தரத்தினாலான மிகப்பெரிய வன்பொருள் மற்றும் மென்பொருள் தொழிற்நுட்பப் பூங்கா ஒன்றை சிப்காட் நிறுவனம் உருவாக்கியது. இதன் மூலம், டைடல் பூங்கா அமைந்துள்ள சென்னை தரமணியிலிருந்து பழைய மாமல்லபுரச் சாலை, தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப நெடுஞ்சாலையாக உயர்வு பெற்றது.

இந்தச் சாலையில் பல்வேறு மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய மென்பொருள் தொழிற்சாலைகளை கழக ஆட்சிட்யின்போதே நிறுவின. சோழிங்கநல்லூரில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (T.C.S) நிறுவனம், ஆசியாவின் மிகப் பெரிய மென்பொருள் மையத்தை தொடங்கியது. அதைத் தொடர்ந்து மற்ற மிகப் பெரிய நிறுவனங்களான விப்ரோ, இன்ஃபோசிஸ் மற்றும் போலாரிஸ் ஆகிய நிறுவனங்களும் தங்களது மையங்களை இப்பகுதியில் நிறுவின.

இங்கிலாந்திலுள்ள World Tel நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ள கூட்டுத் தொழில் முயற்சியின் காரணமாக, தமிழகம் முழுவதும் கழக ஆட்சியின்போது 13,000 சமுதாய இணைய மையங்களை அமைக்கப்பட்டன. இதன் மூலம், ஏறத்தாழ 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.

கணினியைப் பயன்படுத்தி நெடுந்தொலைவுக்கு அப்பால் வெளிநாடுகளில் உள்ள மருத்துவ வல்லுநர்களிடமிருந்து அறிவுரை மற்றும் வழிகாட்டுதலுடன், நவீன மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு Tele Medicine எனப்படும் தொலைத் தொடர்பு வழி மருத்துவ வசதியும் கழக ஆட்சியின்போதுதான் தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம், சென்னை மாநகரம் மருத்துவ சுற்றுலா நகரமாக வளர்ச்சியடைந்தது

கணினி கல்வித் திட்டம்

உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் பயன்பெறும் வகையில் முதன்முதலாக தமிழ் இணையப் பல்கலைக் கழகமும் தொடங்கப்பட்டதும் தி.மு.க ஆட்சியில்தான். தற்போது இது, தமிழ் இணையக் கல்விக் கழகம் என்ற பெயருடன் செயல்பட்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் உள்ள 1,200 மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் கணினியை விருப்பப் பாடமாகக் கற்பிக்கும் திட்டம், 187 கோடியே 66 லட்ச ரூபாய் செலவில் முதலமைச்சர் கலைஞரால் தொடங்கப்பட்டது. இதனால், ஒவ்வொரு பள்ளியிலும், 40 மாணவர்கள் என்ற அடிப்படையில், சுமார் 48,000 மாணவர்கள், ஆண்டுதோறும் மென்பொருள் துறையில் வேலை பெறும் வாய்ப்புக்கு தகுதியுடையவர்களாக வெளியே வந்தனர்.

இத்திட்டம், அரசின் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள், வேளாண் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம், ஆண்டுதோறும் 60,000 மாணவ மாணவியர் கணினிக் கல்வியிலும் தேர்ச்சி பெற்றனர். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அறிமுகம் செய்யப்பட்ட இந்தக் கணினி கல்வித் திட்டம்தான், இந்தியாவிலேயே முதலாவது மிகப்பெரிய திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை 1999 ஏப்ரல் 23-ம் தேதி தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், “சமூகநீதிக் காவலனாகப் பாடுபடும் தமிழக அரசு, கிராமப்புற மற்றும் நடுத்தர மக்களிடையே படிக்க வருபவர்களின் நலனில் கவனம் கொள்ளும் என்று நம்பிக்கை கொள்வதாக” தி.மு.க அரசுக்கு பாராட்டுத் தெரிவித்தது.

அரசுத் துறைகள் கணினிமயம்

ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படையான நடைமுறைகளில் மிகுந்த நம்பிக்கை கொண்ட கலைஞர், அரசு நிர்வாக வழங்கும் சேவைகள், தங்கு தடையின்றி விரைவாகவும், முழுமையாகவும் மக்களைச் சென்று அடைந்திட வேண்டுமென்ற நோக்கத்துடன், அரசுத் துறைகளை கணினிமயமாக்கினார். முதற்கட்டமாக, பதிவுத் துறை, மோடார் வாகனங்கள் துறை, நிலப் பதிவேடுகள் மற்றும் வரைபடங்கள் துறை, விற்பனை வரித் துறை போன்றவற்றைக், கணினிமயமாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கலைஞர் ஆட்சியின் சாதனைகள் 1969-76

1969 – 1976 ஆட்சிக் காலம்

1. பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம்.

2. இலவசக் கண்ணொளி வழங்கும் திட்டம்.

3. குடிசை மாற்று வாரியம்.

4. சுற்றுலா வாரியம்.

5. குடிநீர் வடிகால் வாரியம்.

6. ஆதிதிராவிடர் இலவசக் கான்க்ரீட் வீட்டு வசதித் திட்டம்.

7. சிங்காரவேலர் நினைவு மீனவர் இலவச வீட்டு வசதித் திட்டம்.

8. பிற்படுத்தப்பட்டோர் – மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கெனத் தனி அமைச்சகம்.

9. பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அமைத்து, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் இட ஒதுக்கீடுகளை உயர்த்தியது.

10. பேருந்துகள் நாட்டுடைமை, போக்குவரத்துக் கழங்கங்கள் உருவாக்கம்.

11. அனைத்துக் கிராமங்களுக்கும் மின் இணைப்புத் திட்டம்.

12. விவசாயத் தொழிலாளர்களுக்குக் குடியிருப்பு மனை உரிமைச் சட்டம்.

13. சேலம் உருக்காலைத் திட்டம்.

14. 15 ஏக்கர் நில உச்சவரம்புச் சட்டம்.

15. 1,78,880 ஏக்கர் உபரி நிலம் மீட்கப்பட்டு 1,37,236 வியசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

16. சிப்காட் தொழில் வளாகங்கள்.

17. பூம்புகார் கப்பற் போக்குவரத்துக் கழகம்.

18. ஆதரவற்ற குழந்தைகளுக்கு திருக்கோயில்களில் கருணை இல்லங்கள்.

19. கை ரிக்‌ஷாக்களை ஒழித்துச் சைக்கிள் ரிக்‌ஷாக்கள் வழங்கும் திட்டம்.

20. மாற்றுத் திறனாளிகள் நல வாழ்வுத் திட்டம்.

21. அஞ்சுகம் அம்மையார் நினைவுக் கலப்புத் திருமனத் திட்டம், 1969 – 1976-ல் தங்கப் பதக்கம், 1989 – 1990-ல் ரூ.5,000 நிதியுதவி, 1996-ல் ரூ.10,000 நிதியுதவி, 1997 முதல் ரூ.20,000 நிதியுதவி.

22. அரசு ஊழியர்களுக்குக் குடும்பப் பாதுகாப்புத் திட்டம்.

23. பணிக் காலத்தில் உயிரிழக்கும் அரசு ஊழியர் வாரிசுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி.

24. டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணத் திட்டம். 1975-ல் திட்டம் தொடக்கம், 1989-ல் நிதியுதவி ரூ.5,000. 1997 – 1998-ல் நிதியுதவி ரூ.7,000. 1999 – 2000-ல் நிதியுதவி ரூ.10,000.

25. மாநிலத் திட்டக் குழு உருவாக்கம்.

26. காவல்துறை மேம்பாட்டுக்கு 1969-ல் முதலாவது காவல் ஆணையம். 1989-ல் இரண்டாவது காவல் ஆணையம். 2006-ல் மூன்றாவது காவல் ஆணையம்.